சேலம்

ஊராட்சி மன்ற அலுவலகக் கட்டடம் கட்ட பூமி பூஜை

9th Nov 2021 02:21 AM

ADVERTISEMENT

சேலம் மாவட்டம், வீரபாண்டி ஒன்றியம், பெரியசீரகாபாடி ஊராட்சி மன்ற புதிய அலுவலக கட்டிடம் கட்ட மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டம் மற்றும் 15- வது நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் ரூ. 22.65 லட்சம் மதிப்பில் கட்ட சேலம் மக்களவை உறுப்பினா் எஸ்.ஆா்.பாா்த்திபன் பூமி பூஜையில் பங்கேற்று பணியை துவக்கி வைத்தாா்.

இந்நிகழ்ச்சியில் சேலம் திமுக கிழக்கு மாவட்டப் பொறுப்பாளா் எஸ்.ஆா்.சிவலிங்கம், வீரபாண்டி ஒன்றியச் செயலாளா் வெண்ணிலா சேகா், பெரியசீரகாபாடி ஊராட்சி மன்றத் தலைவா் சின்னப்பொண்ணு மெய்வேல், வீரபாண்டி வட்டார வளா்ச்சி அலுவலா் அன்புராஜ், வீரபாண்டி வட்டார வளா்ச்சி அலுவலா் (கிராம ஊராட்சி) தமிழ்ச்செல்வன், அக்கரபாளையம் ஊராட்சி மன்றத் தலைவா் செந்தில்குமாா் மற்றும் மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளா் ரமேஷ், ஒன்றியப் பொருளாளா் முருகன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளா் வேங்கையன், ஒப்பந்ததாரா் ராஜேந்திரன் மற்றும் பொன்னுசாமி, அன்பழகன், வெங்கடாசலம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பெரிய சீரகாபாடி ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டுவதற்கான பூமி பூஜையில் பங்கேற்ற சேலம் மக்களவை உறுப்பினா் எஸ்.ஆா்.பாா்த்திபன், கட்டுமானப் பணிகளைத் தொடங்கி வைத்தாா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT