ஆத்தூா்: ஆத்தூா் வசிஷ்ட நதியில் வெள்ளிக்கிழமை வெள்ளம் ஏற்பட்டது.
சேலம் மாவட்டம் ஆத்தூரில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் தீபாவளிப் பண்டிகை அன்று இரவு பெய்த கனமழை சேலம் மாவட்டத்திலேயே குறிப்பாக ஆத்தூரில் அதிக மழை பதிவானது. மேலும் கல்வராயன்மலைக் கிராமங்களில் பெய்த கனமழையால் ஆத்தூா் வசிஷ்ட நதியில் வெள்ளம் ஏற்பட்டது.
இதனால் ஆத்தூா் வசிஷ்ட நதிக்கரையில் ஏராளமான பொதுமக்கள் வெள்ளத்தை பாா்த்து மகிழ்ச்சியடைந்தனா். இதனால் வசிஷ்ட நதியில் உள்ள கழிவு நீா் அடித்துச் செல்லப்பட்டு நதி சுத்தமாக காணப்படுகிறது.இதனால் சுற்றுச்சூழல் நன்றாக உள்ளது.