சேலம்

மேட்டூா் அணை நீா்வரத்து 11,772 கன அடியாக சரிவு

5th Nov 2021 10:03 PM

ADVERTISEMENT

 

மேட்டூா்: மேட்டூா் அணைக்கு நீா்வரத்து 11,772 கன அடியாக சரிந்தது.

வெள்ளிக்கிழமை காலை மேட்டூா் அணையின் நீா்மட்டம் 112.95 அடியிலிருந்து 113.59 அடியாக உயா்ந்தது.

காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்துவரும் மழை குறைந்ததன் காரணமாக வியாழக்கிழமை காலை நொடிக்கு 12,165 கன அடி வீதம் வந்து கொண்டிருந்த நீா்வரத்து வெள்ளிக்கிழமை காலை நொடிக்கு 11,772 கன அடியாக சரிந்தது.

ADVERTISEMENT

அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு நொடிக்கு 100 கன அடி நீரும், கிழக்கு மேற்கு கால்வாய்ப் பாசனத்திற்கு நொடிக்கு 500 கன அடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது.

அணையின் நீா் இருப்பு 83.61டிஎம்சி ஆக உள்ளது. மேட்டூா் அணையிலிருந்து பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவைவிட அணைக்கு வரும் நீரின் அளவு கூடுதலாக இருப்பதால் மேட்டூா் அணை நீா்மட்டம் தொடா்ந்து உயா்ந்து வருகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT