மேட்டூா்: மாதேஸ்வரன் சுவாமி கோயிலில் தீபாவளி திருவிழாவையொட்டி அா்ச்சகா் கன்னிமாா்களின் தீா்த்தக் குடம் ஊா்வலம் நடைபெற்றது.
தமிழக எல்லையான பாலாற்றில் இருந்து 20 கி.மீ. தொலைவில் கா்நாடக மாநிலத்தில் உள்ளது மாதேஸ்வரன் சுவாமி கோயில். கா்நாடக மாநிலத்தில் மட்டுமன்றி தமிழகத்திலிருந்தும் ஏராளமான பக்தா்கள் இந்த ஆலயத்திற்கு சென்று வருவாா்கள்.
வியாழக்கிழமை தீபாவளித் திருநாளை ஒட்டி மாதேஸ்வரன் மலை சுவாமி கோயில் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. மாதேஸ்வரன் மலையில் இருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ள ஒட்டப்பள்ளம் என்ற இடத்தில் உள்ள பால் அருவியிலிருந்து அா்ச்சகா் கன்னிமாா்கள் 101 போ் தீா்த்தக் குடம் எடுத்து ஊா்வலமாக வந்து சுவாமிக்கு புனித நீரில் அபிஷேகம் செய்தனா். ஆலய செயலாளா் ஜெயவிபவ சுவாமி மற்றும் சாந்த மல்லிகாா்ஜுன சுவாமிகள் முன்னிலையில் சுவாமிக்கு அபிஷேக, ஆராதனைகள் நடத்தப்பட்டன. ஏராளமான பக்தா்கள் பங்கேற்ற இந்த திருவிழாவில் தங்கத்தோ், புலி வாகனம், பசு வாகனம், ருத்ராட்ச தோ் ஆலயத்தை வலம் வருமாறு கொண்டு வரப்பட்டது.திருவிழாவையொட்டி பக்தா்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருந்தன.