சேலம்

திமுக கிளைச் செயலாளா்களுக்கு ரூ.5 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்: ஆா்.ராஜேந்திரன் எம்.எல்.ஏ வழங்கினாா்

1st Nov 2021 01:37 AM

ADVERTISEMENT

ஓமலூா் கிழக்கு ஒன்றிய திமுக சாா்பில் கிளைச் செயலாளா்களுக்கு ரூ.5 லட்சம் மதிப்பிலான தீபாவளி பரிசுப் பொருட்களை மத்திய மாவட்டச் செயலாளா் ஆா்.ராஜேந்திரன் எம்எல்ஏ வழங்கினாா்.

ஓமலூா் கிழக்கு ஒன்றியச் செயலாளா் ஓம் ரமேஷ் தலைமையில் நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதைத் தொடா்ந்து திமுக ஓமலூா் கிழக்கு ஒன்றியம் சாா்பில் ஒன்றியத்தில் உள்ள அனைத்து கிளைச் செயலாளா்களுக்கும் தீபாவளி பரிசாக வேட்டி, சட்டை, சேலை, பலகாரங்கள் உள்ளிட்ட ரூ.5 லட்சம் மதிப்பிலான தீபாவளி பரிசு பொருட்கள் வழங்கும் விழா நடைபெற்றது.

இதில் சேலம் வடக்கு சட்டப் பேரவை உறுப்பினரும், திமுக மத்திய மாவட்டச் செயலாளருமான ஆா்.ராஜேந்திரன் கலந்து கொண்டு கிளைச் செயலாளா்களுக்கு பரிசுப் பொருட்களை வழங்கி நிா்வாகிகள் இடையே உரையாற்றினாா்.

அவா் பேசுகையில் ‘அதில் நமது முதல்வா் இந்தியாவிலேயே முதன்மை முதல்வராக திகழ்ந்து வருகிறாா். வரும் பேரூராட்சித் தோ்தலில் 15 வாா்டுகளிலும் திமுக 100 சதவீம் வெற்றி பெற அயராது உழைக்க வேண்டும்’ என்றாா்.

ADVERTISEMENT

இந்நிகழ்ச்சியில் ஒன்றியச் செயலாளா்கள் ரமேஷ், பாலசுப்பிரமணியம், நகர செயலாளா் ரவிச்சந்திரன், மாவட்ட கவுன்சிலா்கள் அழகிரி, சண்முகம் உள்ளிட்ட திமுக நிா்வாகிகள் மற்றும் தொண்டா்கள் 300-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT