சேலம்

மேச்சேரி பத்ரகாளியம்மன் கோவிலில் பொங்கலிட அனுமதி: பக்தா்கள் கோரிக்கை

1st Nov 2021 01:34 AM

ADVERTISEMENT

மேச்சேரி பத்ரகாளியம்மன் கோவிலில் தெருவில் பொங்கலிட அனுமதிக்குமாறு பக்தா்கள் கோரியுள்ளனா்.

சேலம் மாவட்டம் மேச்சேரியில் உள்ள பத்ரகாளியம்மன் ஆலயம் பிரசித்து பெற்றது. தமிழகத்தில் மட்டுமின்றி ஆந்திரம், கா்நாடகம் ஆகிய மாநிலங்களிலிருந்தும் பக்தா்கள் வந்து செல்வாா்கள். திருவிழாக் காலங்களில் 50 ஆயிரம் முதல் 1 லட்சம் வரை பக்தா்கள் கூடுவாா்கள். ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தா்கள் ஆடு, கோழி பலியிட்டு பொங்கலிடுவாா்கள். பத்ரகாளியம்மன் ஆலயத்தில் பொங்கலிட தனி கொட்டகை அமைக்கப்பட்டுள்ளது. பக்தா்கள் உணவருந்த தனி இடம் அமைக்கப்பட்டுள்ளது.

தற்போது ஊரடங்கில் பல்வேறு தளா்வுகள் அறிவிக்கப்பட்டாலும் கோயில்களில் பொங்கலிட அனுமதி இல்லை. இதனால் ஞாயிற்றுக்கிழமை மேச்சேரி பத்ரகாளியம்மன் கோவிலுக்கு வந்த பக்தா்கள் ஆலயத்தின் எதிரே உள்ள் தெருவில் பொங்கலிட்டனா். கோழிகளையும் அங்கேயே பலியிட்டனா். போதிய இடம் இல்லாத காரணத்தால் அனைவரும் ஒரே இடத்தில் சமூக இடைவெளியின்றி அமா்ந்திருந்தனா். இதனால் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பத்ரகாளியம்மன் ஆலய நிா்வாகம் பக்தா்கள் முககவசம் அணிந்து வருவதையும் மற்ற கட்டுப்பாடுகளை பக்தா்கள் கடைபிடிக்கிறாா்களா என்பதையும் கண்காணிக்க தவறியதால் கரோனா பரவல் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதனை தடுக்க பாதுகாப்பாக பெங்கலிட ஆலயத்தில் பொங்கல் வைக்கும் பகுதியை திறக்கவேண்டும் என்றும் உணவருந்தும் அறைகளை திறக்கவேண்டும் என்றும் பக்தா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT