சேலம்

தம்மம்பட்டி: கரோனா நோயாளிக்கு ஆங்கில மருத்துவச் சிகிச்சை அளித்த ஹோமியோபதி மருத்துவமனைக்கு சீல்  

27th May 2021 05:08 PM

ADVERTISEMENT

தம்மம்பட்டியில் கரோனா தொற்று ஏற்பட்டவருக்கு ஆங்கில மருத்துவச் சிகிச்சை அளித்த ஹோமியோபதி மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்டது.
சேலம் மாவட்டம், தம்மம்பட்டி கடைவீதியில் பள்ளி வாசல் எதிரே ஜெயபால் (35) என்ற ஹோமியோபதி மருத்துவர் நடத்தி வரும் படுக்கை வசதிகளுடன் கூடிய சிறு மருத்துவமனை உள்ளது. இந்நிலையில், தம்மம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், ஓணான் கரடைச் சேர்ந்த பிச்சைப்பிள்ளை(55) என்பவர்க்கு, எடுக்கப்பட்ட பரிசோதனையில் கரோனா தொற்று உள்ளதாக வியாழக்கிழமை காலை தெரிய வந்தது. 
அதையடுத்து தம்மம்பட்டி சுகாதாரத் துறையினர், பிச்சைப்பிள்ளையை, செந்தாரப்பட்டியிலுள்ள அரசின் கரோனா சிகிச்சை மையத்திற்கு (100 படுக்கை வசதியுள்ளது) செல்ல அறிவுறுத்தினர். ஆனால் பிச்சைப் பிள்ளை, அங்கே செல்லாமல், ஜெயபால் நடத்தி வரும், ஹோமியோபதி சிறு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்துள்ளார். அங்கு அவருக்கு ஆங்கில மருத்துவ சிகிச்சை தரப்பட்டு வந்தது. 
தகவல் அறிந்த கெங்கவல்லி வட்டாட்சியர் வெங்கடேசன், வட்டார தலைமை மருத்துவர் வேலுமணி, தம்மம்பட்டி பேரூராட்சி செயல் அலுவலர் சுந்தரமூர்த்தி, தம்மம்பட்டி காவல் ஆய்வாளர் செந்தில்குமார், சுகாதார ஆய்வாளர் ஜமால் முகமது ஆகியோர் அங்கு சென்று, கரோனா நோயாளிக்கு, ஆங்கில மருத்துவ சிகிச்சை வழங்கியதால், அந்த ஹோமியோபதி  மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்டது. 
அங்கு முறையற்ற சிகிச்சையால் இதுவரை ஏழு பேர், கரோனாவால் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. மருத்துவர் ஜெயபால் மீது, சமூக இடைவெளியின்றி மருத்துவமனை நடத்தியது உள்ளிட்ட வகைகளில் வழக்கு பதியப்பட்டுள்ளது. அங்கிருந்த ஆங்கில மருந்து, மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டதுடன், அங்கிருந்த கரோனா நோயாளிகள் அரசு கரோனா சிகிச்சை மையத்திற்கு மாற்றப்பட்டனர்.

Tags : Thammampatti corona patient
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT