சேலம்

'பசித்தால் எடுத்துக்கலாம்': கலாம் நண்பர்கள் குழு இலவசமாக உணவுப் பொட்டலம் வழங்கல்

27th May 2021 04:49 PM

ADVERTISEMENT

சேலத்தில் ஆதரவற்ற மற்றும் முதியவர்களுக்கு "பசித்தால் எடுத்துக்கலாம்" என்ற பெயரில் கலாம் நண்பர்கள் குழுவினர் உணவுப் பொட்டலங்களை வழங்கி வருகின்றனர்.

சேலம் பொன்னம்மாப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் சல்மான். இவர் கலாம் நண்பர்கள் குழுவின் சேலம், நாமக்கல், ஈரோடு மாவட்ட ஒருங்கிணைப்பாளராக உள்ளார். சேலத்தில் கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் மே 24 முதல் மே 31 வரை முழு பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் உணவின்றி தவிக்கும் ஆதரவற்றோர் மற்றும் முதியவர்களுக்கு உதவும் வகையில் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த கலாம் நண்பர்கள் குழு சார்பில் "பசித்தால் எடுத்துகலாம்" என்ற பெயரில் உணவு பொட்டலங்களை இலவசமாக வழங்கி வருகின்றனர்.

பொன்னம்மாபேட்டை காமராஜர் சிலை அருகில் தினமும்  சுமார் 50 உணவு பொட்டலங்களை விநியோகம் செய்து வருகின்றனர். ஆதரவற்ற முதியவர்களுக்கு தேடிச் சென்று உணவு பொட்டலங்களை வழங்கி வருகின்றனர்.
இதுதொடர்பாக கலாம் நண்பர்கள் குழுவின் ஒருங்கிணைப்பாளர் சல்மான் கூறியதாவது: சென்னை, ஈரோடு, சேலம், நாமக்கல் ஆகிய பகுதிகளில், கலாம் நண்பர்கள் குழு பல்வேறு உதவிகளைச் செய்து வருகிறோம்.

சேலம் மாவட்டத்தில் "பசித்தால் எடுத்துகலாம்" என்ற பெயரில் பசித்தவர்களுக்கு உணவுப் பொட்டலங்களை வழங்கி வருகிறோம். கடந்த மே 24 ஆம் தேதி முதல் இலவசமாக உணவு வழங்கி வருகிறோம். நாள்தோறும் 50 முதல் 60 உணவுப் பொட்டலங்களை ஆதரவற்ற முதியவர்களுக்கு வழங்கி வருகிறோம். நான் நர்சரி மூலம் நாட்டு விதைகள் மற்றும்  மரக்கன்றுகளை  விற்பனை செய்யும்  தொழிலை செய்து வருகிறேன்.

ADVERTISEMENT

அதில் கிடைக்கும் பணம் மற்றும் நண்பர்கள் சிலரின் உதவியுடன் இதுபோன்ற சேவைகளை செய்து வருகிறோம் என்றார்.
 

Tags : salem
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT