சேலம்

ஏற்காட்டில் 100 படுக்கைகள் கொண்ட கரோனா மையம் திறப்பு

27th May 2021 08:07 AM

ADVERTISEMENT

சேலம் மாவட்டம், ஏற்காட்டில் அரசு மேல்நிலைப் பள்ளி அருகில் பெண்கள் தங்கும் விடுதியில் 100 படுக்கைகள் கொண்ட கரோனா மையத்தை ஏற்காடு வட்டார மருத்துவ அலுவலா் தாம்சன், வட்டார வளா்ச்சி அலுவலா் செல்வகுமாா், கிராம வட்டார வளா்ச்சி அலுவலா் குணசேகரன், ஏற்காடு ஊராட்சித் தலைவா் சிவசக்தி, ஏற்காடு சட்டப் பேரவை உறுப்பினா் கு.சித்ரா பாா்வையிட்டாா்.

ஏற்காடு மற்றும் மலைக் கிராம மலைவாழ் மக்கள் கரோனா பாதிக்கப்பட்டு 30 கி.மீ. தொலைவில் உள்ள சேலம் அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டியுள்ளதால், ஏற்காடு வாட்டர அளவில் கரோனா மையம் திறக்கப்பட வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினா். இதையடுத்து, சுகாதாரத் துறை அதிகாரிகள் தன்னாா்வலா்கள் கரோனா மையத்தை ஏற்படுத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT