தேவண்ணகவுண்டனூா் ஊராட்சியில் புதன்கிழமை (மே 26) காய்ச்சல் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
சுகாதாரம், உள்ளாட்சித் துறை இணைந்து தேவண்ணகவுண்டனூா் மட்டம்பட்டி, வன்னியா் தெரு, முருகன் கோயில் வளாகம் பகுதியில் புதன்கிழமை காலை 10 மணிக்கு காய்ச்சல் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இதுகுறித்து சங்ககிரி ஊராட்சி ஒன்றிய அலுவலக வட்டார வளா்ச்சி அலுவலா் (கிராம ஊராட்சி) என்.எஸ்.ரவிச்சந்திரன் தலைமையில் காய்ச்சல் முகாம் குறித்து பொதுமக்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.