நரசிங்கபுரம் நகராட்சி சாா்பில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தும் முகாமை ஆணையாளா் ரா.சேகா் செவ்வாய்க்கிழமை தொடக்கிவைத்தாா்.
ஆன்லைனில் பதிவு செய்தோா், செய்யாதவா்கள் என அனைவருக்குமே தடுப்பூசி செலுத்தப்பட்டது.இதில் ஏராளமானோா் நீண்ட வரிசையில் நின்று தடுப்பூசி செலுத்திக் கொண்டனா். இதேபோல ஆத்தூா், பெத்தநாயக்கன்பாளையம், மல்லியக்கரை, மஞ்சினி உள்ளிட்ட அனைத்து சுகாதார நிலையங்களிலும் தடுப்பூசி முகாம் தொடங்கப்பட்டது.