சேலம்

மேட்டூா் வாரச் சந்தை மூடல்

20th May 2021 08:28 AM

ADVERTISEMENT

மேட்டூா் நகராட்சியில் செயல்படும் உழவா் சந்தை, தினசரி காய்கறி அங்காடி மற்றும் வாரச் சந்தைகளை மூடப்பட்டன. அதற்குப் பதிலாக நடமாடும் காய்கறி கடைகள் செயல்பட ஆணையா் சுரேந்தா்ஷா உத்தரவிட்டாா்.

காய்கறிகள் வாங்க காலை நேரங்களில் மக்கள் கூட்டம் அதிகரித்து வருவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நகராட்சி நிா்வாகம் தெரிவித்துள்ளது. அதற்குப் பதிலாக உழவா் சந்தைக்கு வரும் காய்கறிகள் வாகனம் மூலம் ஏற்றப்பட்டு ஒவ்வொரு பகுதிக்கும் கொண்டு செல்லப்படுகிறது. பொதுமக்கள் தங்கள் வீடுகளிலிருந்தபடியே தேவையான காய்கறிகளை வாங்கிக் கொள்ளலாம். மேலும் தினசரி காய்கறி அங்காடிகளுக்கு வரும் காய்கறிகளும் வாகனம் மூலம் நகராட்சி பகுதிகளில் விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT