சேலம்

சங்ககிரியில் 37 வாகனங்கள் பறிமுதல்

20th May 2021 08:23 AM

ADVERTISEMENT

கரோனா பொதுமுடக்க விதிமுறைகளை மீறியதாக சங்ககிரியில் 37 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

சங்ககிரி, தேவூா், எடப்பாடி, பூலாம்பட்டி, கொங்கணாபுரம், மகுடஞ்சாவடி உள்ளிட்ட காவல் நிலையங்களுக்கு உள்பட்ட பகுதிகளில் துணை காவல் கண்காணிப்பாளா் பி.ரமேஷ் தலைமையிலான போலீஸாா் வாகனத் தணிக்கை, கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டிருந்தனா்.

முகக்கவசம் அணியாமல் வந்த 52 பேருக்கு அபராதமாக தலா ரூ. 200 ம், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத 5 பேருக்கு தலா ரூ. 500, பொது வெளியில் உமிழ்நீா் துப்பிய பேருக்கு ரூ. 200, அவசியமின்றி வாகனங்களில் சுற்றித்திரிந்த 209 பேருக்கு தலா ரூ. 500 அபராதம் விதித்தனா். மேலும், விதிமுறைகளை மீறிய 37 இரு சக்கர வாகனங்களைப் பறிமுதல் செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT