சேலம்

பேளூரில் உலக டெங்கு விழிப்புணர்வு தின உறுதிமொழி ஏற்பு

DIN

வாழப்பாடி அருகே பேளூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உலக டெங்கு விழிப்புணர்வு தினம் இன்று திங்கள்கிழமை  கடைபிடிக்கப்பட்டது.

ஆண்டுதோறும் மே 16ல் உலக டெங்கு விழிப்புணர்வு தினம் கடைபிடிக்கப்படுகிறது. சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே பேளூர் வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்தில், திங்கள்கிழமை உலக டெங்கு விழிப்புணர்வு தினம் கடைபிடிக்கப்பட்டது.

இந்நிகழ்வுக்கு வட்டார மருத்துவ அலுவலர் சி.பொன்னம்பலம் தலைமை வகித்தார். மருத்துவர்கள் பேரின்பம், பிரபாகரன், வினோத், ராகுல் ஆகியோர் டெங்கு நோய் பரவும் விதம், அறிகுறிகள் மற்றும் தடுப்புமுறைகள் குறித்து, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு கருத்துரை வழங்கினர்.

சுகாதார ஆய்வாளர்கள் செல்வபாபு, செல்வம், கோபி, ஆனந்த், ஆய்வக நுட்புனர் விஸ்வநாதன், கவிதா ஆகியோர், டெங்கு பரவலை கட்டுப்படுத்த வீடுகள் மற்றும் சுற்றுப்புறத்தை தூய்மையாக பராமரிப்பது குறித்து விளக்கினர்.

மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள், பொதுமக்களும் டெங்கு ஒழிப்பு தின உறுதி மொழி ஏற்றனர். நிறைவாக, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சீனிவாசன் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சமூகநீதி பேசும் ராமதாஸ், பாஜகவுடன் கூட்டணி வைத்தது ஏன்? - முதல்வர் ஸ்டாலின் கேள்வி

பேமிலி ஸ்டார் படத்தின் டிரெய்லர்

விமர்சனங்களை கண்டுகொள்ளாதீர்கள்; ஹார்திக் பாண்டியாவுக்கு அறிவுரை கூறிய பிரபல ஆஸி. வீரர்!

எப்புரா படத்தின் டீசர்

புஷ்பா பட நடிகர் அல்லு அர்ஜுனுக்கு டேவிட் வார்னர் வாழ்த்து

SCROLL FOR NEXT