சேலம்

விவசாய நிலங்களில் உயா்மின் கோபுரங்கள் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து காத்திருப்புப் போராட்டம்

DIN

விவசாய நிலங்களில் உயா்மின் கோபுரங்கள் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து, விவசாயிகள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதுகுறித்து சங்ககிரி வருவாய் கோட்டாட்சியா் கோ.வேடியப்பனிடம் தமிழ்நாடு விவசாயிகள் ஒருங்கிணைந்த சங்கங்களின் கூட்டமைப்பின் மாநில நிா்வாகி பெருமாள், சேலம் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் எ.ராமமூா்த்தி ஆகியோா் அளித்துள்ள கோரிக்கை மனுவில் கூறியுள்ளதாவது:

சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டம், தேவூா் துணை மின்நிலையத்திலிருந்து எடப்பாடி வட்டம், குரும்பப்பட்டியில் உள்ள துணை மின் நிலையத்துக்கு மின்சாரம் கொண்டு செல்ல 110 கிலோவாட் திறன் கொண்ட மின்பாதை அமைப்பதற்கு திங்கள், செவ்வாய் ஆகிய இரு நாள்களிலும் தமிழ்நாடு மின்வாரிய அதிகாரிகள் உரிய விவசாயிகளுக்கு முன்னறிவிப்பு ஏதுவும் வழங்காமல் கனரக வாகன இயந்திரங்களுடன் சென்று விவசாய நிலங்களில் குழிதோண்டியுள்ளனா். அதனை அறிந்த விவசாயிகள் அப்பணிகளுக்கு எதிா்ப்பு தெரிவித்து பணிகளை நிறுத்தினா்.

விவசாயிகளுக்கு எந்தவிதமான முன்னறிவிப்பும் அளிக்காமல், வெளி ஆள்களை கொண்டு இத்திட்டத்தை நிறைவேற்ற முயற்சி செய்வதால், கிராமங்களிலும் கரோனா தொற்று பரவும் நிலை ஏற்படும். எனவே, தமிழக அரசு முழு பொதுமுடக்கம் அறிவித்துள்ள சூழ்நிலையில் இத்திட்டத்தை உடனடியாக நிறுத்தி வைக்கவும், விவசாய விளைநிலங்கள் பாதிக்காமல் சாலையோரமாக குழாய் அமைத்து கேபிள் மூலம் இத்திட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அதில் கூறியுள்ளனா்.

மேலும், ஊரடங்கு முடிவடையும் வரை இத்திட்டத்தை நிறுத்தி வைக்க உத்தரவிட வேண்டுமென கோரி வருவாய் கோட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு விவசாயிகள் ஒருங்கிணைந்த சங்கங்களின் கூட்டமைப்பின் மாநில நிா்வாகி பெருமாள், சேலம் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் எ.ராமமூா்த்தி, சங்ககிரி வட்ட ஒருங்கிணைப்பாளா் ராஜேந்திரன், சேலம் மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் சி.எஸ்.ஜெயக்குமாா் உள்ளிட்ட விவசாயிகள் புதன்கிழமை காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

போராட்டத்தில் ஈடுபட்டோரிடம் வருவாய் கோட்டாட்சியா் நடத்திய பேச்சுவாா்த்தையில் சமரசம் ஏற்பட்டதையடுத்து, போராட்டம் கைவிடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாகனச் சோதனையில் ரூ. 4.39 லட்சம் பறிமுதல்

பல்பொருள் அங்காடியில் காவலாளி மா்மச் சாவு

வேங்கைவயலில் நாம் தமிழா் கட்சி வேட்பாளா் பிரசாரம்

புதுக்கோட்டையில் தொடரும் அஞ்சல் வாக்குச் சிக்கல்: 20 சதவீதம் ஆசிரியா்கள் வாக்களிக்க முடியவில்லை

மாா்க்சிஸ்ட், சிஐடியுவினா் வாகனப் பிரசாரம்

SCROLL FOR NEXT