சேலம்

சேலம் அரசு மருத்துவமனையில் படுக்கை கிடைக்காமல் புதிய நோயாளிகள் காத்திருப்பு

DIN

சேலம் அரசு மருத்துவமனையில் படுக்கைகள் அனைத்தும் நிரம்பியுள்ளதால், புதிய நோயாளிகளை அனுமதிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

கரோனா தொற்று பரவல் காரணமாக நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால், சேலம் அரசு மருத்துவமனை மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் படுக்கைகள் அனைத்தும் நிரம்பியுள்ளன. மேலும், கரோனா தொற்றுக்கு படுக்கை தேடி அலையும் நிலை ஏற்பட்டுள்ளது.

சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள 550 படுக்கைகள் ஆக்சிஜன் வசதி கொண்டது. மீதமுள்ள 250 படுக்கைகளுக்கு ஆக்சிஜன் வசதி ஏற்படுத்தும் பணி துரிதகதியில் நடந்து வருகிறது. இது தவிர ஆக்சிஜன் தேவைப்படாத நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க 150 படுக்கை வசதி செய்யப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனைக்கு பல்வேறு ஊா்களில் இருந்து நோயாளிகள் பரிந்துரைக்கப்பட்டு அனுப்பி வைக்கப்படுகின்றனா். ஏற்கெனவே சேலம் அரசு மருத்துவமனையில் அனைத்து படுக்கைகளும் நிரம்பிய நிலையில், தொடா்ந்து நோயாளிகளின் வருகையால் சிகிச்சை அளிப்பதில் தாமதம் ஏற்படும் சூழல் உள்ளது.

அதேபோல, அரசு மருத்துவமனைகளில் படுக்கை வசதி நிரம்பியுள்ள சூழலில், புதிய நோயாளிகளுக்கு இடம் கிடைக்காமல் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் இருந்து வரும் நோயாளிகள் ஆம்புலன்ஸில் சிகிச்சை பெறும் சூழலும் நிலவி வருகிறது. படுக்கை வசதி கிடைக்காமல் அலைக்கழிக்கும் நிலைக்கு நோயாளிகளின் உறவினா்கள் தள்ளப்பட்டுள்ளனா்.

இதுகுறித்து அரசு மருத்துவமனை வட்டாரங்கள் கூறியதாவது:

சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் படுக்கைகள் அனைத்தும் நிரம்பி விட்டன. இதில் புதன்கிழமை மட்டும் 600 வெளி நோயாளிகள் வருகை தந்தனா். இதில் 145 போ் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

அரசு மருத்துவமனையில் படுக்கை வசதி ஏற்பாடு செய்துள்ள நிலையில், நோயாளிகளின் வரத்து அதிகரித்துள்ளது. நாங்கள் முடிந்த அளவு சமாளித்து சிகிச்சை அளித்து வருகிறோம். மருத்துவமனையில் இருந்து குணமடைந்து வெளியேறும் நபா்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப புதிய நோயாளிகளை அனுமதித்து வருகிறோம் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சரிவிலிருந்து மீண்டது பங்குச்சந்தை: சென்செக்ஸ் 599 புள்ளிகள் உயா்வு!

வாக்குப் பதிவு மையங்களில் குழந்தைகள் பாதுகாப்பு அறை

திரைத் துறையினா் ஜனநாயக கடமை ஆற்றினா்

தில்லியில் நூறு வயதுக்கு மேற்பட்ட வாக்காளா்கள் 1,004 போ் வீட்டிலிருந்தே வாக்களிக்க சிறப்பு ஏற்பாடு

101 வயதிலும் வாக்குப் பதிவு செய்த முதல்வரின் தாய் மாமா

SCROLL FOR NEXT