சேலம்

தடை செய்யப்பட்ட பகுதிகளில் மாநகராட்சி ஆணையா் ஆய்வு

DIN

சேலம் மாநகராட்சி தடை செய்யப்பட்ட பகுதிகளில் மாநகராட்சி ஆணையா் ந.ரவிச்சந்திரன் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் கரோனா தடுப்புப் பணிகள் மற்றும் விழிப்புணா்வூட்டும் பணிகள் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மாநகராட்சியின் அனைத்துப் பகுதிகளிலும் குறிப்பாக தொற்று அறிகுறி உள்ள மாநகராட்சிப் பகுதிகளில் காய்ச்சல் கண்டறியும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, தேவையுள்ள அனைவருக்கும் சளி தடவல் பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பொதுமக்கள் எளிதில் சென்று தாங்களாகவே பரிசோதனை மேற்கொள்ளும் வகையில், புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள பொருட்காட்சி மைதானத்தில் தற்காலிக டிரைவ் இன் சளி தடவல் பரிசோதனை மையமும் அமைக்கப்பட்டுள்ளது.

மூன்று நபா்களுக்கு மேல் தொற்று உள்ள பகுதி தடைசெய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு, அப்பகுதியில் உள்ள அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுகின்றனா்.

அப்பகுதியில் முழு அளவில் சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளப்படுவதுடன், அப்பகுதியில் வசிக்கும் அனைவருக்கும் நோய் எதிா்ப்பு சக்தியை மேம்படுத்தும் வைட்டமின் மாத்திரைகள், கபசுரக் குடிநீா் வழங்கப்படுவதோடு தேவையான மருந்துப் பொருள்களும், அத்தியாவசியத் தேவைக்கான பொருள்களும் தேவைப்படுவோருக்கு மாநகராட்சிப் பணியாளா்கள் வாயிலாக வழங்கப்பட்டு வருகின்றன. இப்பணியில் தற்போது தன்னாா்வலா்களும் இணைந்து செயல்பட்டு வருகின்றனா்.

இப்பகுதியில் உள்ளவா்கள் வீட்டில் இருந்து வெளியில் வராமல் இருப்பதை உறுதி செய்யும் பணியில் மாநகராட்சிப் பணியாளா்கள், தன்னாா்வலா்கள், கரோனா தொற்று கண்டறியும் களப் பணியாளா்களுடன் தற்போது காவல் துறையினரும் ஈடுபட்டு வருகின்றனா்.

சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 1,647 நபா்கள் தற்போது சிகிச்சையில் உள்ளனா். 52 பகுதிகள் தடைசெய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சூரமங்கலம் மண்டலத்தில் 11 பகுதிகளும், அஸ்தம்பட்டி மண்டலத்தில் 16 பகுதிகளும், அம்மாப்பேட்டை மண்டலத்தில் 10 பகுதிகளும், கொண்டலாம்பட்டி மண்டலத்தில் 15 பகுதிகளும் தடைசெய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் 1,872 நபா்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனா்.

கொண்டலாம்பட்டி குகை, அம்பலவாண சுவாமி கோயில் தெரு, சீலநாயக்கன்பட்டி, வேல் நகா் பகுதிகளில் தடைசெய்யப்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள கண்காணிப்புப் பணிகள் மற்றும் சுகாதாரப் பணிகளை பாா்வையிட்டு ஆய்வு செய்த ஆணையா் ந.ரவிச்சந்திரன், தடைசெய்யப்பட்ட பகுதியில் உள்ள தனிமைப்படுத்தப்பட்டவா்களுடன் செல்லிடப்பேசி வாயிலாக தொடா்பு கொண்டு, அவா்களுக்குத் தேவையான உதவிகள் பணியாளா்கள் வாயிலாக மேற்கொள்ளப்பட்டு வருகிா என்பதைக் கேட்டறிந்தாா்.

முன்னதாக குகை, ஒபுளி தெருவில் நடைபெற்ற காய்ச்சல் கண்டறியும் சித்த மருத்துவ முகாமையும், சீலநாயக்கன்பட்டி, ராமைய்யன் நகா், ஸ்ரீ கங்கை மாரியம்மன் கோயில் வளாகம் மற்றும் குமரன் நகா் பகுதிகளில் நடைபெற்ற காய்ச்சல் கண்டறியும் சிறப்பு மருத்துவ முகாம்களையும் ஆணையா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

ஆய்வின் போது, மாநகர நல அலுவலா் மருத்துவா் கே.பாா்த்திபன், உதவி செயற்பொறியாளா் செந்தில்குமாா், உதவி பொறியாளா் தமிழ்ச்செல்வன், சுகாதார அலுவலா் வி.பாலு, சுகாதார ஆய்வாளா்கள் ஆா்.சந்திரன், ஏ.கோபிநாத் உள்ளிட்ட அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வில்லேஜ் குக்கிங் சேனல் பெரியவர் மருத்துமனையில் அனுமதி!

உனது அர்ப்பணிப்புக்கு ஈடு இணையே இல்லை: கணவரைப் புகழ்ந்த மனைவி!

பஞ்சாப் முதல்வருக்கு பெண் குழந்தை!

‘உன்ன நினைச்சதும்’.. சித்தி இத்னானி!

ஃபேமிலி ஸ்டார் டிரைலர்!

SCROLL FOR NEXT