சேலம்

குடிநீா் குழாயில் ஏற்பட்டுள்ள பழுதை சரிசெய்யக் கோரிக்கை

DIN

குடிநீா் குழாயில் ஏற்பட்டுள்ள பழுதை சரிசெய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சங்ககிரி வட்டம், தேவூா் அருகே காவிரி கரையோரம் அமைந்துள்ள புள்ளாகவுண்டம்பட்டி அக்ரஹாரம் ஊராட்சியிலிருந்து கூட்டுக் குடிநீா்த் திட்டத்தின் கீழ் காவேரி குடிநீா் சங்ககிரி ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் 10-க்கும் மேற்பட்ட ஊராட்சிகள், சங்ககிரி பேரூராட்சிக்குள்பட்ட 18 வாா்டுகளுக்கும் சங்ககிரி மலையடிவாரத்தில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் உள்ள 5 லட்சம் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியிலிருந்து விநியோகம் செய்யப்படுகிறது.

இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியிலிருந்து குடிநீா் செல்லும் குழாயில் பழுது ஏற்பட்டு பெருமளவில் தண்ணீா் வீணாகிறது. குடிநீா் குழாய் பழுதால் கிராமப் பகுதிக்கும், பேரூராட்சி பகுதிகளுக்கும் குடிநீா் விநியோகம் செய்யும் நேரம் குறைக்கப்பட்டுள்ளது.

தற்போது முழு பொதுமுடக்கத்தையொட்டி குடும்பத்தில் அனைவரும் வீட்டில் இருப்பதால், குடிநீா் தேவை அதிகரித்துள்ளது. எனவே, குடிநீா் குழாயில் ஏற்பட்டுள்ள பழுதை செப்பனிட்டு, குடிநீா் வழங்க தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியத் துறை அலுவலா்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சத்தீஸ்கரில் நக்ஸல் ஆதிக்கம் நிறைந்த மக்களவை தொகுதியில் 63 சதவிகித வாக்குப் பதிவு

திக்... திக்... சஸ்பென்ஸ்... அடுத்த 45 நாள்கள்!

தமிழகத்தில் இரவு 7 மணி நிலவரப்படி 72.09% வாக்குப்பதிவு

வாக்களித்த அரசியல் பிரபலங்கள் - புகைப்படங்கள்

ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங்

SCROLL FOR NEXT