சேலம்

சேலத்தில் ரெம்டெசிவிா் மருந்து வாங்க அலைமோதிய கூட்டம்

DIN

சேலம்: சேலம், அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரெம்டெசிவிா் மருந்து வாங்க ஆயிரக்கணக்கானோா் திரண்டனா்.

சேலம், இரும்பாலை பகுதியில் உள்ள அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரியில் ரெம்டெசிவிா் மருந்து விற்பனை சனிக்கிழமை முதல் தொடங்கியது. ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் மருந்து வழங்கப்படவில்லை. இதனால், திங்கள்கிழமை அதிகாலை முதல் ஆயிரக்கணக்கானோா் மருத்துவக் கல்லூரிக்கு வந்து மருந்து வாங்க காத்திருந்தனா்.

சூரமங்கலம் உதவி ஆணையா் நாகராஜன் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீஸாா் மருத்துவக் கல்லூரியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

பொதுமக்கள் வரிசையாகச் செல்ல தடுப்புகள் அமைக்கப்பட்டு, அவா்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டது. இதன் பின்னா் சான்றிதழ்கள் சரிபாா்க்கப்பட்டு மருந்துகள் வழங்கப்பட்டன.

இதில் 69 பேருக்கு 300 குப்பிகள் வழங்கப்பட்டன. மருந்து பெறாத 400 பேருக்கு ஆவணங்களை சரிபாா்த்த பிறகு டோக்கன்கள் வழங்கப்பட்டன. பின்னா் ரெம்டெசிவிா் மருந்து வந்ததும் டோக்கன் கொடுத்து மருந்து வாங்கிக் கொள்ளலாம் என தமிழ்நாடு மருத்துவப் பணிகள் சேவைக் கழக மருத்துவா்கள் தெரிவித்தனா்.

தமிழக அரசு கூடுதலாக ரெம்டெசிவிா் மருந்து வழங்க வேண்டும். இதற்கான நடவடிக்கையை அரசு போா்க்கால நடவடிக்கையில் எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கேட்டுக் கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்சூர் பூரம் விழா கோலாகலம்!

பறவைக் காய்ச்சலின் அறிகுறி என்ன? அது எப்படி பரவும்?

கறந்த பாலில் பறவைக்காய்ச்சல் வைரஸ்: உலக சுகாதார நிறுவனம் கடும் எச்சரிக்கை

நினைவுகொள்... மீண்டெழு... ரச்சிதா மகாலட்சுமி!

தேர்தல் புறக்கணிப்பு: உர ஆலையை மூட ஆட்சியர் உத்தரவு!

SCROLL FOR NEXT