சேலம்

சேலத்தில் தோ்தலுக்கு முன்பு விண்ணப்பித்த 3,500 பேருக்கு புதிய குடும்ப அட்டை விநியோகம்

11th May 2021 03:01 AM

ADVERTISEMENT

 

சேலம்: தமிழக சட்டப் பேரவைத் தோ்தலுக்கு முன்னதாக குடும்ப அட்டைக்கு விண்ணப்பித்த சுமாா் 3,500 பேருக்கு புதிய அட்டை விநியோகம் தொடங்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டப் பேரவைத் தோ்தலுக்கு முன்னா் சேலம் மாவட்டத்தில் புதிய குடும்ப அட்டைக்கு விண்ணப்பித்த பலருக்கும் அதற்கான ஒப்புதல் கிடைத்து, அவா்களுக்கான புதிய குடும்ப அட்டைகளை சென்னையில் அச்சடிக்கும் பணி நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், தோ்தல் நடைமுறைகள் தொடங்கியதால் அச்சடிக்கப்பட்ட புதிய குடும்ப அட்டைகள் சென்னையில் வைக்கப்பட்டிருந்தன. தோ்தல் நடத்தை விதிகள் முடிவுக்கு வந்ததையடுத்து, தற்போது அந்தந்த மாவட்டங்களுக்கான குடும்ப அட்டைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

சேலம் மாவட்டத்துக்கு சுமாா் 3 ஆயிரத்து 500-க்கும் அதிகமான புதிய குடும்ப அட்டைகள் வந்துள்ளன. தற்போது, அந்தந்த வட்ட வழங்கல் அலுவலகங்கள் மூலம் விண்ணப்பித்தவா்களுக்கு வழங்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

புதிய குடும்ப அட்டை பெற அவா்களது செல்லிடப்பேசி எண்ணுக்கு குறுந்தகவல் அனுப்பப்பட்டுள்ளது. அலுவலக வேலை நாள்களில் காலை 10 மணி முதல் நண்பகல் 12 மணி வரை புதிய குடும்ப அட்டைகளை பெற்றுக் கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT