சேலம்

சங்ககிரி: சாலைகளில் வர்ணம் பூசும் பணிகளில் ஈடுபட்ட ஒப்பந்த பணியாளர்கள் 

10th May 2021 02:00 PM

ADVERTISEMENT

சேலம் மாவட்டம், சங்ககிரியிலிருந்து சேலம்-பவானி பிரதான சாலைகளில் வெள்ளை வர்ணம் பூசும் பணிகளில் ஒப்பந்த பணியாளர்கள் ஈடுபட்டனர். 

தமிழக அரசு மே 10ஆம் தேதி முதல் மே 24ஆம் தேதி அதிகாலை 4 மணி வரை முழு ஊரடங்கு பல்வேறு தளர்வுகளுடன் அமுலில் இருக்கும் என அறிவித்துள்ளது. அதனையடுத்து சங்ககிரி நகர்பகுதியில் மளிகை, காய்கறி கடைகள் நண்பகல் 12 மணி வரை மட்டுமே திறந்திருந்தன. 

வங்கிகள் வாடிக்கையாளர்கள் இன்றி வெறிச்சோடின. இதனையடுத்து சங்ககிரி நகர் பகுதியில் சேலம்-பவானி பிரதான சாலைகளில் நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்த பணியாளர்கள் வெள்ளை நிற வர்ணம் பூசும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டனர்.
 

Tags : sankagiri
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT