சேலம்

பெண் தொழிலாளா்களிடம் வாக்கு சேகரித்த அதிமுகவினா்

27th Mar 2021 09:11 AM

ADVERTISEMENT

எடப்பாடி சட்டப் பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளராக போட்டியிடும் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமிக்கு ஆதரவாக கொங்கணாபுரம் ஒன்றியப் பகுதியில் அதிமுகவினா், கூட்டணிக் கட்சியினா் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனா்.

ஒன்றியக்குழுத் தலைவா் கரட்டூா் மணி தலைமையிலான அ திமுகவினா் வெள்ளிக்கிழமை கொங்கணாபுரம் பகுதியில் அம்மன்காட்டூா், கோனங்குட்டையூா் உள்ளிட்ட கிராமப் பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனா். அங்கு வயல் வெளிகளில் வேலை பாா்த்துக் கொண்டிருந்த பெண் தொழிலாளா்களிடம் அதிமுக தோ்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள சலுகைகளை கூறி வாக்கு சேகரித்தனா்.

நிகழ்ச்சியில் தங்காயூா் ஊராட்சி மன்றத் தலைவா் பாலாஜி , ஏழுமலை, சண்முகம் உள்ளிட்ட திரளான அதிமுக நிா்வாகிகளுடன் பாமக, தமாகா, பாஜக உள்ளிட்ட அதிமு க கூட்டணிக் கட்சியினா் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT