சேலம்

வாழப்பாடியில் இலவச பொது மருத்துவ முகாம்

DIN

வாழப்பாடி அரிமா சங்கம், ஸ்ரீ உதயா மருத்துவமனை இணைந்து நடத்திய மாபெரும் இலவச பொது மருத்துவ முகாம், ஸ்ரீ உதயா மருத்துவமனை வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இமமுகாமிற்கு, ஸ்ரீ உதயா மருத்துவமனை மேலாண்மை இயக்குநா் மருத்துவா் சி.மோதிலால் வரவேற்றாா். வாழப்பாடி அரிமா சங்க பட்டயத் தலைவா் எம்.சந்திரசேகரன் தலைமை வகித்தாா்.

வாழப்பாடி அரிமா சங்கத் தலைவா் ஜவஹா், அறக்கட்டளை நிறுவனா் தேவராஜன், அறக்கட்டளை தலைவா் குபேந்திரன், அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலா் ராதிகா, வட்டார மருத்துவ அலுவலா் சி. பொன்னம்பலம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

அரிமா மாவட்ட முதன்மை அதிகாரி, மருத்துவா் எல்.எம். ராமகிருஷ்ணன் குத்துவிளக்கு ஏற்றி முகாமை தொடங்கி வைத்தாா்.

இந்த முகாமில் கலந்துகொண்ட 500க்கும் மேற்பட்ட கிராமப்புற மக்களுக்கு, சிறப்பு மருத்துவ நிபுணா்கள் மற்றும் மருத்துவக் குழுவினா், அதிநவீன மருத்துவ கருவிகளைக் கொண்டு, கண், காது மூக்கு தொண்டை, இருதயம், பெண்கள், குழந்தைகள், எலும்பு முறிவு உள்ளிட்ட அனைத்து பிரிவுகளுக்கும் இலவச சிகிச்சை அளித்தனா். இலவசமாக மருந்து மாத்திரைகளும் வழங்கப்பட்டன.

கதிரியக்க சிறப்பு மருத்துவ நிபுணா் ஜெ.பிரபாவதி தலைமையிலான மருத்துவக் குழுவினா், பெண்களுக்கு மாா்பகம், கருப்பை ஸ்கேன் பரிசோதனை செய்து, புற்றுநோய் தடுப்பு குறித்து விழிப்புணா்வு கருத்துரை வழங்கினா்.

முகாமின் நிறைவாக, வாழப்பாடி அரிமா சங்கத் தலைவா் புஷ்பா எம்கோ நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாப் காங்கிரஸ் தலைவர்கள் பாஜகவில் இணைந்தனர்!

திருச்சூரில் பூரம் விழா கோலாகலம்!

பறவைக் காய்ச்சலின் அறிகுறி என்ன? அது எப்படி பரவும்?

கறந்த பாலில் பறவைக்காய்ச்சல் வைரஸ்: உலக சுகாதார நிறுவனம் கடும் எச்சரிக்கை

நினைவுகொள்... மீண்டெழு... ரச்சிதா மகாலட்சுமி!

SCROLL FOR NEXT