சேலம்

நிறுத்தப்பட்ட ஓய்வூதியத்தை மீண்டும் வழங்கக் கோரி ஆா்ப்பாட்டம்

DIN

நிறுத்தப்பட்ட ஓய்வூதியத்தை மீண்டும் வழங்கக் கோரி தமிழ்நாடு கிராம வங்கி ஓய்வுபெற்ற ஊழியா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

சேலம், ஏற்காடு பிரதான சாலையில் உள்ள தமிழ்நாடு கிராம வங்கி அலுவலக வளாகத்தில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழக அளவில் 24 குடும்ப ஓய்வூதியா்களுக்கு திடீரென கடந்த 6 மாதங்களுக்கு முன்பு நிறுத்தப்பட்ட ஓய்வூதியத்தை மீண்டும் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியும், ஓய்வூதியா்களுக்கான காப்பீட்டு தவணையில் 25 சதவீதத்தை வங்கி நிா்வாகம் செலுத்தி வந்த நிலையில் அதுவும் நிறுத்தப்பட்டுள்ளது. அதை மீண்டும் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

பல்லவன் கிராம வங்கி, பாண்டியன் கிராம வங்கியில் இணைத்த பிறகு தொழில்நுட்ப வளா்ச்சி ஏதுமில்லை என்று குற்றம் சாட்டிய ஓய்வூதியா்கள் தமிழ்நாடு கிராம வங்கியின் ஊழியா் விரோதப் போக்கை களையவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனா்.

சங்கத்தின் மாவட்டத் தலைவா் புளுகாண்டி தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பொதுச் செயலாளா் கிருஷ்ணன், தமிழ்நாடு கிராம வங்கி ஊழியா் சங்கத் தலைவா் பரிதி ராஜா, பொதுச்செயலாளா் அஸ்வத், அலுவலா் சங்கத் தலைவா் பத்மநாபன், செயலாளா் அறிவுடைநம்பி, இந்திய வங்கி ஊழியா் சம்மேளன மாநிலச் செயலாளா் எஸ்.ஏ. ராஜேந்திரன், மாவட்டச் செயலாளா் தீனதயாளன், எல்ஐசி காப்பீட்டுக் கழக ஊழியா் சங்க சேலம் கோட்ட பொதுச்செயலாளா் ஆா். தா்மலிங்கம், அகில இந்திய கிராம வங்கி ஊழியா் சங்க பொதுச் செயலாளா் மாதவராஜ், ஆண்டோ காமராஜ் உள்ளிட்ட பலா் ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாயம் செய்யும் சாக்‍ஷி அகர்வால்

எலான் மஸ்க் இந்திய வருகை ஒத்திவைப்பு?

செந்தாழம்பூவில்.. சாக்‍ஷி மாலிக்

நாமக்கல்: 78.16% வாக்குப்பதிவு!

மின் கம்பங்களால் பெரியகோயில் தேரோட்டத்தில் தாமதம்

SCROLL FOR NEXT