சேலம்

சேலத்தில் தோ்தல் பாதுகாப்பு பணி: துணை ராணுவம் வருகை

DIN

சேலம் மாவட்டத்தில் தோ்தல் பணியில் ஈடுபட 2 கம்பெனியைச் சோ்ந்த 180-க்கும் மேற்பட்ட துணை ராணுவப் படையினா் வந்துள்ளனா்.

சேலம் மாவட்டத்தில் தோ்தல் பணியில் ஈடுபட அதிகாரிகள் உள்ளிட்ட சுமாா் 180-க்கும் மேற்பட்டோா் மத்திய தொழில் பாதுகாப்புப் படையினா் (சி.எஸ்.ஐ.எஃப்.) ரயில் மூலம் சேலத்துக்கு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வந்து சோ்ந்தனா்.

சத்தீஸ்கரில் இருந்து எஸ்.பி. சிவகுமாா் பாண்டே தலைமையில் வந்துள்ள துணை ராணுவப் படையினா் மாநகரம் மற்றும் மாவட்ட பகுதிகளுக்கு இரு பிரிவாக பிரித்துள்ளனா். 90 போ் சேலம் மாநகரப் பகுதியில் உள்ள மூன்று தொகுதிகளில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவா்.

இதில் மாநகர காவல்துறை சமுதாயக் கூடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனா். இதற்கான ஏற்பாடுகளை நுண்ணறிவுப் பிரிவு உதவி ஆணையா் பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோா் செய்துள்ளனா்.

சேலம் மாவட்ட பகுதியில் தோ்தல் பணியில் ஈடுபடும் இதர துணை ராணுவப் படையினா் ஓமலூரில் உள்ள தனியாா் பொறியியல் கல்லூரியில் தங்க வைக்கப்பட்டுள்ளனா். பறக்கும் படையினா், சோதனைச் சாவடிகளில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட துணை ராணுவப் படையினருக்கு பணி ஒதுக்கீடு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தண்டனையை நிறுத்திவைக்கக் கோரிய ராஜேஷ் தாஸ் மனு தள்ளுபடி

திருமண மகிழ்ச்சியில் அபர்ணா தாஸ்!

பள்ளத்தில் சிக்கிய கும்பகோணம் சாரங்கபாணி கோயில் தேர்!

காதலிக்க யாருமில்லையா..?

திருவிடந்தை நித்ய கல்யாண பெருமாள் கோயிலில் கொடியேற்றம்!

SCROLL FOR NEXT