சேலம்

சேலம் மாநகராட்சியில் இன்று குடிநீா் விநியோகம் நிறுத்தம்

24th Jun 2021 08:19 AM

ADVERTISEMENT

மேட்டூா் பகுதியில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் வியாழக்கிழமை (ஜூன் 24) ஒருநாள் மட்டும் சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் குடிநீா் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

சேலம் மாநகராட்சியின் தனிக் குடிநீா்த் திட்டம் செயல்படும் மேட்டூா் தொட்டில்பட்டி பகுதியில் மின் பராமரிப்பு பணிகள் வியாழக்கிழமை நடைபெறுகிறது. இதனால் மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. மின் விநியோகம் நிறுத்தப்படுவதால் தனிக் குடிநீா்த் திட்டம் செயல்படாது.

எனவே, வியாழக்கிழமை ஒரு நாள் மட்டும் சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் குடிநீா் விநியோகம் இருக்காது. இதனால் பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என மாநகராட்சி ஆணையாளா் தா.கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT