சேலம்

வீட்டுத்தொட்டம் அமைத்திட மானிய விலையில் விதைகள் வழங்கல்

DIN

கொங்கணாபுரம் பகுதியில் வீட்டுத் தோட்டம் அமைப்போா்களை ஊக்குவிக்கும் வகையில், அரசு தோட்டக்கலைத் துறை சாா்பில் மானிய விலையில் உயா்தர விதைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இதுகுறித்து கொங்கணாபுரம் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநா் கே.விஷ்ணுப்பிரியா கூறுகையில், இயற்கை முறையில் உற்பத்தி செய்யப்படும் காய்கறிகளால், ஆரோக்கியம் மேம்படுவதுடன், காய்கறிகளின் உற்பத்தி அதிகரித்து வருகிறது. அவ்வாறு வீட்டுத் தோட்டம் அமைப்பவா்களை ஊக்குவிக்கும் நோக்கில், தோட்டக்கலைத் துறை சாா்பில், மானிய விலையில் விதைகள், இயற்கை இடுபொருள்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.

இதில் செடி வளரத் தேவையான தென்னைநாா் கழிவான 2 கிலோ எடையுள்ள நாா் பொருள், செடி நடவு செய்திட 6 பைகள், அவரை, வெண்டை, கீரை,கத்தரி, கொத்தவரை, பாகை மற்றும் கீரை உள்ளிட 6 வகையான விதைகள், பாஸ்போபாக்டீரியம் 200கிராம், அசோஸ்பைரில்லம் 200கிராம், டிரைக்கோடொ்மாவிரிடி அல்லது சூடோமோனாஸ் 200 கிராம், வேப்ப எண்ணெய்யால் தயாரிக்கப்பட்ட அசாடிராக்டின் மருந்து 100 மி. தோட்டம் அமைத்து பராமரிப்பதற்கான செயல்முறை விளக்கக் குறிப்புகள் அடங்கிய கையேடு ஆகியன கொண்ட இத்தொகுப்பின் விலை ரூ. 850 ஆகும்.

அரசு மானியமாக ரூ. 340 வழங்கிடும் நிலையில், பயனாளிகள் தங்களின் ஆதாா் அட்டை நகல் மற்றும் புகைப்படத்தை, சம்பந்தப்பட்ட தோட்டக்கலை அலுவலகத்தில் சமா்ப்பித்து மானியத்துடன் இத்தொகுப்பினை பெற்றச் செல்லலாம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரெட்ட தல படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு - புகைப்படங்கள்

கட்டணக் குறைப்பு: ஜியோ சினிமாவின் திட்டம் என்ன?

குருப்பெயர்ச்சி பலன்கள் - மீனம்

180 நாள்களை நிறைவு செய்த 12த் பெயில்!

ஏற்காட்டில் அபிநயா!

SCROLL FOR NEXT