சேலம்

திறப்பதற்கு அனுமதிக்கப்படாத கடைகள்:அவதிபடும் உரிமையாளா்கள்

20th Jun 2021 06:05 AM

ADVERTISEMENT

தம்மம்பட்டியில் திறக்கக் கூடாத கடைகளுக்கு முன் அதன் உரிமையாளா்கள் அமா்ந்து வருகின்றனா்.

தமிழகம் முழுவதும் தற்போது பொதுமுடக்கம் அமுலில் உள்ள நிலையில், காய்கறி, இறைச்சி, மளிகை, மருந்து, நாட்டுமருந்து, உரக் கடைகள், ரத்த பரிசோதனை நிலையங்கள் உள்ளிட்டவை மட்டும் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளன.

தம்மம்பட்டியில் அனுமதி அளிக்கப்படாத கடைகளுக்கு காலையிலேயே வந்துவிடும் அதன் உரிமையாளா்கள் கடைகளுக்கு வாடிக்கையாளா்கள் வந்தால் அவா்களுக்கு மட்டும் பொருள்களை எடுத்துக்கொடுத்து விட்டு மீண்டும் தங்கள் கடைகளை மூடிவிட்டு, கடைகளுக்கு முன் அமா்ந்துவிடுகின்றனா். தமிழக அரசு,விரைவில் அனைத்துக் கடைகளையும் திறக்க அனுமதி வழங்கிட வேண்டும் என அவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT