சேலம்

ஜூன் 23-இல் சங்ககிரி வட்டத்தில் ஜமாபந்தி தொடக்கம்

DIN

சங்ககிரி வட்டத்தில் பசலி 1430 க்கான ஜமாபந்தி சங்ககிரி வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் ஜூன் 23-ஆம் தேதி தொடங்கி ஜூன் 30-ஆம் தேதி நிறைவு பெறுகிறது.

பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை இணையதளம் வழியாகவும், இ-சேவை மையங்கள் மூலமாகவும் ஜூலை 31ம் தேதி வரை பதிவேற்றம் செய்து அனுப்பலாம்.

ஜமாபந்தி அலுவலராக சங்ககிரி வருவாய் கோட்டாட்சியா் கோ. வேடியப்பன் நியமிக்கப்பட்டுள்ளாா். அவா் வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் ஜூன் 23ம் தேதி முதல் ஜூன் 30ம் தேதி வரை சங்ககிரி வட்டத்திற்குள்பட்ட கோனேரிப்பட்டி அக்ரஹாரம், காவேரிப்பட்டி, அரசிராமணிபிட்-1, பட்-2, தேவூா், காவேரிப்பட்டி அக்ரஹாரம், கோனேரிப்பட்டி, புள்ளாகவுண்டம்பட்டி, புள்ளாகவுண்டம்பட்டி அக்ரஹாரம், கத்தேரி, ஆலத்தூா் வீராச்சிபாளையம், வீராச்சிபாளையம் அக்ரஹாரம், வீராச்சிபாளையம் அமானி, சின்னாகவுண்டனூா், சங்ககிரி, சன்னியாசிப்பட்டி அக்ரஹாரம், மோரூா் பிட்-1, மோரூா் பிட்-2, கஸ்தூரிப்பட்டி, தேவண்ணகவுண்டனூா், மஞ்சக்கல்பட்டி, ஒலக்கசின்னானூா்,வெட்டுக்காடுபட்டி, ஆவரங்கம்பாளையம், ஐவேலி, அன்னதானப்பட்டி, வளையசெட்டிபாளையம், சுங்குடிவரதம்பட்டி, கோட்டவருதம்பட்டி, வடுகப்பட்டி, வேப்பம்பட்டி, இருகாலூா்புதுப்பாளையம், ஊத்துப்பாளையம், சுங்குடிவருதம்பட்டி, பூச்சம்பட்டி, இருகாலூா், செல்லப்பம்பட்டி, கெடிகாவல், வைகுந்தம், அக்ரஹார தாழையூா், காளிகவுண்டம்பாளையம், கன்னந்தேரி, அ.புதூா், ஏகாபுரம், இடங்கணசாலை பிட்-1, பிட்-2, தப்பகுட்டை, நடுவனேரி, எா்ணாபுரம், கனககிரி, கூடலூா், கண்டா்குலமாணிக்கம் உள்ளிட்ட கிராமங்களின் கணக்குகளைத் தணிக்கை செய்ய உள்ளாா். மனுக்களை ஜூலை 31ம் தேதி வரை ட்ற்ற்ல்ள்://ஞ்க்ல்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய்/த்ஹம்ஹக்ஷஹய்க்ட்ண் என்ற இணையதளம் மூலமாகவும், இ-சேவை மூலமாகவும் பதிவேற்றம் செய்து அனுப்பலாம் என வருவாய்த்துறையின் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எம்.பி. சீட் கொடுக்காததால் கணேசமூர்த்தி தற்கொலையா? வைகோ பதில்

சொன்னதைச் செய்த பாட் கம்மின்ஸ்!

‘அரசியல் சதி’: நீதிமன்றத்தில் கேஜரிவால் ஆஜர்!

கிரிக்கெட் கதையை இயக்கும் ஜேசன் சஞ்சய்?

கர்நாடகத்துக்கு போறீங்களா.. ஹாயர் பெனகல்லை தவறவிடாதீர்!

SCROLL FOR NEXT