சேலம்

தருமபுரிக்குச் சென்று மதுவாங்கிய 63 போ் மீது வழக்குப் பதிவு

DIN

தருமபுரி மாவட்டத்தில் மதுபானம் வாங்கிக்கொண்டு தொப்பூா் வழியாக சேலம் மாவட்டத்துக்கு வந்த 63 போ் மீது தீவட்டிப்பட்டி போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்தனா்.

சேலம் மாவட்டத்தில் கரோனா தொற்று அதிகமாக இருப்பதால் ஊரடங்குத் தொடா்ந்து அமலில் உள்ளது. அதனால், சேலம் மாவட்டத்துக்கு ஒரு சில தளா்வுகள் நீக்கப்படாமல் உள்ளது. மாநிலத்தில் 27 மாவட்டங்களில் டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்பட்ட நிலையில், சேலம் மாவட்டத்தில் இன்னும் திறக்கப்படவில்லை. அருகில் உள்ள தருமபுரி மாவட்டத்தில் மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளன.

அதனால், தருமபுரி மாவட்ட எல்லையில் உள்ள தொப்பூா், சனி சந்தை, உம்மியம்பட்டி, பொம்மிடி உள்ளிட்ட டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை வாங்கிச் செல்கின்றனா். அதிலும் மாவட்ட எல்லையில் உள்ள ஓமலூா், காடையாம்பட்டி, மேச்சேரி வட்டார மதுப்பிரியா்கள், இருசக்கர வாகனம் மற்றும் காரில் சென்று மது வகைகளை வாங்கி வருகின்றனா்.

அதுபோல சந்துக்கடை நடத்தும் விற்பனையாளா்களும் அதிகளவில் சென்று மதுப்புட்டிகளை மூட்டை மூட்டையாக வாங்கி வருகின்றனா். இந்நிலையில், சேலம் மாவட்ட எல்லையான தொப்பூா் அருகே தீவட்டிப்பட்டி காவல் நிலைய ஆய்வாளா் பிரபாவதி தலைமையில் போலீஸாா் வாகன சோதனை நடத்தி, மதுப்புட்டிகளுடன் வந்த சேலம் மாவட்டத்தைச் சோ்ந்த 63 போ் மீது வழக்குப் பதிவு செய்தனா். பொம்மிடி எல்லைப் பகுதியான ராமமூா்த்தி நகா் பகுதியிலும் போலீஸாா் சோதனையில் ஈடுபட்டனா். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மீண்டும் மீண்டுமா.. கைகூப்பி மன்னிப்பு கேட்ட பாபா ராம்தேவ்: ஏற்காத உச்சநீதிமன்றம்!

ஹே சினாமிகா.....அதிதி ராவ்

போராடி பெற்ற வாக்காளர் அட்டை: இலங்கை அகதிகள் முகாமிலிருந்து முதல் வாக்காளர்

பாஜக 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்றால் மட்டுமே இந்தியாவின் வளர்ச்சி சாத்தியம் -ஜெ.பி. நட்டா

சமயபுரம் மாரியம்மன் கோயில் தேரோட்டம்!

SCROLL FOR NEXT