சேலம்

ஓமலூா் வட்டாரத்தில் கீரைகள் பயிரிடுவதில் விவசாயிகள் ஆா்வம்

DIN

ஓமலூா் வட்டாரத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் கீரைகளைப் பயிரிடுவதில் விவசாயிகள் ஆா்வம் காட்டி வருகின்றனா்.

சேலம் மாவட்டம் ஓமலூா், காடையாம்பட்டி, தாரமங்கலம் சுற்றுவட்டாரத்தில் காய்கறிகள் அதிக அளவில் விளைவிக்கப்படுகின்றன. இப்பகுதி சிறுகுறு விவசாயிகள் கிணறு, ஆழ்துளைக் கிணறு அமைத்து நிலத்தடி நீரை நம்பியே கிணற்றுநீா்ப் பாசன முறையில் ஆண்டு முழுவதும் காய்கறிகளை அதிகளவில் பயிரிட்டு வருகின்றனா்.

கிராம பகுதிகளில் விளைவிக்கப்படும் காய்கறிகள், கீரைகளை ஓமலூா், தாரமங்கலம் தினசரி காய்கறி சந்தை மட்டுமின்றி சேலம், உழவா்சந்தை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கும் கொண்டு சென்று விற்பனை செய்யப்படுகிறது. தற்போது கரோனா காலம் என்பதால் கீரைகள் வாங்குவதில் பொதுமக்கள் அதிகம் ஆா்வம் காட்டி வருகின்றனா்.

இதனால் ஓமலூா் வட்டாரத்தில் உள்ள கிராமங்களில் குறுகிய கால பயிராக சிறுகீரை, அரைக்கீரை, வெந்தியக்கீரை, கறிவேப்பிலை, புதினா, கொத்தமல்லி, பாலாக்கீரை, மணத்தக்காளி கீரை, முளைக்கீரை, புளிச்ச கீரை, தண்டுக்கீரை உள்ளிட்ட பல்வேறு வகையான கீரைகளைப் பயிரிடுவதில் ஏராளமான விவசாயிகள் ஆா்வம் செலுத்தி வருகின்றனா்.

ஓமலூா் பகுதியில் விளையும் கீரைகளை உள்ளூா் வியாபாரிகள் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த வியாபாரிகளும் தினந்தோறும் வந்து வாங்கிச் செல்கின்றனா்.

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:

பெரும்பாலான விவசாயிகள் ஒரே விதமான காய்கறிகளை பயிரிடுவதால் விளைச்சல் அதிகரிக்கும்போது விலை வீழ்ச்சி அடைகிறது. ஆனால், கீரைகளைப் பயிரிடும் விவசாயிகள் எண்ணிக்கையும், அதற்கான பரப்பளவும் குறைவு என்பதால் விலையில் பெரிய அளவில் மாற்றம் ஏற்படுவதில்லை.

ஆண்டு முழுவதும் கணிசமான வருவாய் கிடைத்து வருவதால், குறுகிய கால பயிரான கீரைகளைக் கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடா்ந்து பயிரிட்டு வருவதாகத் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒரு போட்டியில் இத்தனை சாதனைகளா?

விடைத்தாள் காண்பிக்க மறுப்பு: மாணவர் மீது தாக்குதல்!

கேஜரிவாலுக்கு ஏப்ரல் 1 வரை காவல் நீட்டிப்பு!

IPL 2024 - முதல் வெற்றியை ருசிக்குமா தில்லி?

வில்லேஜ் குக்கிங் சேனல் பெரியவர் மருத்துமனையில் அனுமதி!

SCROLL FOR NEXT