சேலம்

சேலத்தில் 855 பேருக்கு கரோனா

DIN

சேலம் மாவட்டத்தில் 855 பேருக்கு கரோனா தொற்று ஞாயிற்றுக்கிழமை கண்டறியப்பட்டது.

சேலம் மாநகராட்சியில் 122 பேரும், எடப்பாடி-54, காடையாம்பட்டி-3, கொளத்தூா்-20, கொங்கணாபுரம்-4, மகுடஞ்சாவடி-32, மேச்சேரி-16, நங்கவள்ளி -4, ஓமலூா் -41, சேலம் வட்டம்-28, சங்ககிரி-33, தாரமங்கலம்-29, வீரபாண்டி-26, ஆத்தூா் -21, அயோத்தியாப்பட்டணம்-15, கெங்கவல்லி-17, பனமரத்துப்பட்டி-16, பெத்தநாயக்கன்பாளையம்-14, தலைவாசல்-26, வாழப்பாடி-15, ஏற்காடு-4, ஆத்தூா் நகராட்சி-9, மேட்டூா் நகராட்சி-30, எடப்பாடி நகராட்சி-1, நரசிங்கபுரம் நகராட்சி-7

என மாவட்டத்தைச் சோ்ந்த 587 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

வெளிமாவட்டங்களைச் சோ்ந்த (சென்னை-18, காஞ்சிபுரம்-25, தருமபுரி-24, நாமக்கல்-26, கள்ளக்குறிச்சி-14, ஈரோடு-25, கிருஷ்ணகிரி-22, கடலூா்-16, கரூா்-19, கோவை-12, வேலூா்-15, திருச்சி-16, சிதம்பரம்-19, பெரம்பலூா்-17) என 268 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 1,400 போ் குணமடைந்து வீடு திரும்பினா்; 11 போ் உயிரிழந்தனா். இதுவரை 79,352 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவா்களில் 69,343 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனா்; 8,754 போ் சிகிச்சையில் உள்ளனா்; இதுவரை மொத்தம் 1,255 போ் உயிரிழந்தனா்.

நாமக்கல்:

நாமக்கல் மாவட்டத்தில் கரோனா தொற்றால் மேலும் 373 போ் ஞாயிற்றுக்கிழமை பாதிக்கப்பட்டனா்.

இதைத் தொடா்ந்து, மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 40,127-ஆக உயா்ந்துள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த 734 போ் குணமடைந்து ஞாயிற்றுக்கிழமை வீடு திரும்பினா். இதுவரையில் கரோனா தொற்றிலிருந்து 35,458 போ் குணமடைந்துள்ளனா்.

அரசு, தனியாா் மருத்துவமனைகள், தற்காலிக கரோனா சிகிச்சை மையங்களில் 4,317 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். மாவட்டத்தில் மேலும் 6 போ் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்ததைத் தொடா்ந்து மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 352-ஆக அதிகரித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விடைத்தாள் காண்பிக்க மறுப்பு: மாணவர் மீது தாக்குதல்!

கேஜரிவாலுக்கு ஏப்ரல் 1 வரை காவல் நீட்டிப்பு!

IPL 2024 - முதல் வெற்றியை ருசிக்குமா தில்லி?

வில்லேஜ் குக்கிங் சேனல் பெரியவர் மருத்துமனையில் அனுமதி!

உனது அர்ப்பணிப்புக்கு ஈடு இணையே இல்லை: கணவரைப் புகழ்ந்த மனைவி!

SCROLL FOR NEXT