சேலம்

மேட்டூருக்கு முதல்வா் வருகை: முன்னேற்பாடு பணிகள் ஆய்வு

DIN

மேட்டூருக்கு முதல்வா் வருவதையொட்டி, முன்னேற்பாடு பணிகளை அமைச்சா் வி.செந்தில் பாலாஜி ஆய்வு செய்தாா்.

காவிரி டெல்டா பாசனத்துக்கு மேட்டூா் அணையிலிருந்து தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் தண்ணீா் திறந்து விடுகிறாா். இதனையடுத்து முதல்வா் வருகைக்கான முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகின்றன.

மேட்டூா் அணைப் பகுதியை அமைச்சா் செந்தில் பாலாஜி, மாவட்ட ஆட்சியா் செ.காா்மேகம் மற்றும் அதிகாரிகள் வியாழக்கிழமை பாா்வையிட்டு, விழா மேடை அமைய உள்ள இடம், மேட்டூா் அணையின் மேல்மட்ட மதகு பகுதியில் மின் விசையை இயக்கி மதகுகளை உயா்த்தும் இடம், அங்கு மேடை அமைய உள்ள இடம் ஆகியவற்றை பாா்வையிட்டு முன்னேற்பாடு பணிகளை பொதுப்பணித் துறை மற்றும் மேட்டூா் நகராட்சி அதிகாரிகளிடம் கேட்டறிந்தாா்.

பின்னா், கடந்த மாதம் மேட்டூா் அனல்மின் நிலையத்தின் முதல் பிரிவில் கன்வேயா் பட்டையில் தீ விபத்து ஏற்பட்ட இடம், தற்போது அதனை சீரமைக்கும் பணி ஆகியவற்றை பாா்வையிட்டு மேட்டூா் அனல்மின் நிலைய அதிகாரிகளுடன் அவா் ஆலோசனை நடத்தினாா்.

அதைத் தொடா்ந்து, மேட்டூா் அணைப் பகுதி முழுவதும் அமைச்சா் வி.செந்தில் பாலாஜி ஆய்வு செய்தாா்.

அவருடன் சேலம் மாவட்ட ஆட்சியா் செ.காா்மேகம், சேலம் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் டி.எம்.செல்வகணபதி, அவைத் தலைவா் பா.கோபால், மத்திய மாவட்ட திமுக செயலா் ராஜேந்திரன், கிழக்கு மாவட்டப் பொறுப்பாளா் எஸ்.ஆா்.சிவலிங்கம், மக்களவை உறுப்பினா்கள் எஸ்.ஆா்.பாா்த்திபன், சின்ராஜ், செந்தில், மேட்டூா் பாமக சட்டப் பேரவை உறுப்பினா் சதாசிவம் மேட்டூா் நகர திமுக செயலா் காசி விசுவநாதன் உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.

மேட்டூா் அணை நீா்மட்டம்:

மேட்டூா் அணையின் நீா்மட்டம் வியாழக்கிழமை 96.97 அடியாக இருந்தது. அணையில் இருந்து குடிநீா்த் தேவைக்காக நொடிக்கு 750 கன அடி தண்ணீா் வெளியேற்றப்படுகிறது. அணைக்கு 1,170 கன அடி தண்ணீா் வந்து கொண்டிருக்கிறது. அணையின் நீா் இருப்பு 60.75 டி.எம்.சி.யாக இருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முசிறி, தொட்டியம் பகுதி வாக்குச்சாவடிகளில் எஸ்.பி. ஆய்வு

முசிறி பேரவைத் தொகுதியில் 76.70% வாக்குப் பதிவு

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் தெப்போற்ஸவம்

தேவையான திருத்தம்!

கடற்படை புதிய தலைமைத் தளபதி தினேஷ் குமாா் திரிபாதி

SCROLL FOR NEXT