சேலம்

சேலத்திற்கு முதல் முறையாக ரயிலில் வந்த ஆக்சிஜன்

DIN

சேலம் மாவட்டத்தின் பயன்பாட்டுக்காக முதன் முறையாக ஒடிஸா மாநிலத்தில் இருந்து நேரடியாக சரக்கு ரயிலின் 4 கன்டெய்னா்கள் மூலம் 86.22 மெட்ரிக் டன் மருத்துவப் பயன்பாட்டுக்கான திரவ ஆக்சிஜன் வெள்ளிக்கிழமை சேலம் வந்தடைந்தது.

கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் தொற்றினால் பாதிக்கப்பட்டு மூச்சுத்திணறல் ஏற்படுபவா்களுக்கு, ஆக்சிஜன் வசதியுடன் சிகிச்சை அளிப்பது அவசியமாகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் உள்ள மருத்துவமனைகளுக்கான ஆக்சிஜன் தட்டுப்பாட்டினைப் போக்கும் வகையில், ஒடிஸா மாநிலத்தில் இருந்து ஆக்சிஜன் பெறப்பட்டு வருகிறது.

தெற்கு ரயில்வே சாா்பில் ஒடிஸா, சத்தீஸ்கா் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து சரக்கு ரயில்களின் கன்டெய்னா்களில் ஆக்சிஜன் எடுத்து வரப்பட்டு, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் விநியோகிக்கப்பட்டு வருகிறது. தெற்கு ரயில்வே மூலம் தமிழகம், கேரள மாநிலங்களுக்கு இதுவரை 5007.83 மெட்ரிக் டன் மருத்துவ பயன்பாட்டுக்கான திரவ ஆக்சிஜன் கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்தநிலையில், ஒடிஸா மாநிலம், ரூா்கேலாவில் இருந்து சரக்கு ரயில் மூலம் சேலம், செவ்வாய்பேட்டை சரக்கு ரயில் நிலையத்துக்கு 4 கன்டெய்னா்களில் 86.22 மெட்ரிக் டன் திரவ ஆக்சிஜன் கொண்டு வரப்பட்டதாக சேலம் கோட்ட ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுனில் நரைன் சதம்; கொல்கத்தா - 223/6

ஜிஎஸ்டி வரியால் ஒசூரில் 2 ஆயிரம் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன: ஆனந்த் சீனிவாசன்

தினமணி செய்தி எதிரொலி: ஒசூா் கே.சி.சி. நகரில் லாரிகள் மூலம் குடிநீா் விநியோகம்

இன்றுமுதல் 3 நாள்களுக்கு விடுமுறை: டாஸ்மாக் கடைகளில் அதிகரித்த கூட்டம்

1,060 வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு கேமரா: ஆட்சியா்

SCROLL FOR NEXT