சேலம்

மேட்டூர் அணை நீர்வரத்து 19,665 கனஅடியாக அதிகரிப்பு

25th Jul 2021 09:26 AM

ADVERTISEMENT


மேட்டூர் அணைக்கான நீர்வரத்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 19,665 கனஅடியாக அதிகரித்துள்ளது.

கர்நாடக மாநிலத்தில் பெய்துவரும் கனமழை காரணமாக அங்குள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கர்நாடக அணைகளின் பாதுகாப்பு காரணங்களுக்காக இரு அணைகளில் இருந்தும் மூன்றாவது நாளாக தொடர்ந்து வினாடிக்கு 36,000 கனஅடி தண்ணீர் காவிரியில் திறக்கப்பட்டு வருகிறது.

கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்பட்ட நீர் நேற்று இரவு (சனிக்கிழமை இரவு) முதல் மேட்டூர் அணைக்கு வரத் தொடங்கியது. 

நேற்று காலை வினாடிக்கு 6,841 கனஅடியாக வந்து கொண்டிருந்த நீர்வரத்து நேற்று இரவு வினாடிக்கு 15,000 கனஅடியாகவும் இன்று காலை வினாடிக்கு 19,665 கனஅடியாகவும் அதிகரித்துள்ளது.

ADVERTISEMENT

கர்நாடக அணைகளின் நீர்வரத்து காரணமாக நேற்று காலை 72.55 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 73.27 அடியாக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் அணையின் நீர்மட்டம் சரிவில் இருந்து மீண்டு 0.72 அடி உயர்ந்துள்ளது.

அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 12,000 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 35.27 டிஎம்சி  ஆக உள்ளது.

Tags : mettur
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT