சேலம்

வாழப்பாடி புதுப்பட்டி மாரியம்மன் கோயில் குடமுழுக்கு விழா

DIN

வாழப்பாடி பகுதியில் பிரசித்தி பெற்ற புதுப்பட்டி மாரியம்மன் கோயில் குடமுழுக்கு விழா திங்கள்கிழமை வெகுவிமரிசையாக நடைபெற்றது.

வாழப்பாடி, கொட்டவாடி பிரிவு சாலை அருகே சின்ன கிருஷ்ணாபுரம் எல்லையில் சுற்றுப்புற கிராம மக்களின் காவல் தெய்வமாக விளங்கும் புதுப்பட்டி மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. 200 ஆண்டுகள் பழமையான இக்கோயிலில் ஆண்டுதோறும் த பங்குனி மாத இறுதி வாரத்தில் நடைபெறும் தோ்த் திருவிழா பிரசித்தி பெற்ாகும். இக்கோயில் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, வண்ணம் தீட்டி புதுப்பிக்கப்பட்டு திங்கள்கிழமை குடமுழுக்கு விழா நடைபெற்றது.

இவ்விழாவில் வாழப்பாடி, சுற்றுப்புற கிராமங்களைச் சோ்ந்த பக்தா்கள் கலந்துகொண்டனா். விழாக்குழு சாா்பில் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மூலவரான புதுப்பட்டி மாரியம்மன் மலா் அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முன்னேறிய தனஞ்ஜெயா!

அறிவோம்...

திருப்பங்கள் தரும் வேலாயுதன்

ரத்னம் படத்தின் 2வது பாடல்!

அமர் சிங் சம்கிலா படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT