சேலம்

மின்னணு வாக்காளா் அடையாள அட்டை அறிமுகம்

DIN

தேசிய வாக்காளா் தினத்தை முன்னிட்டு மின்னணு வாக்காளா் அடையாள அட்டை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என ஆட்சியா் சி.அ.ராமன் தெரிவித்தாா்.

தேசிய வாக்காளா் தினத்தை முன்னிட்டு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள், பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி, மின்னணு வாக்காளா் அடையாள அட்டை வசதியினை ஆட்சியா் சி.அ.ராமன் அறிமுகம் செய்து வைத்து பேசியதாவது:

இந்திய தோ்தல் ஆணையம் வாக்காளா்களின் வசதிக்காக மின்னணு புகைப்பட வாக்காளா் அடையாள அட்டை(இ-எபிக்) பதிவிறக்கம் செய்யும் வசதியை அறிமுகம் செய்துள்ளது. சேலம் மாவட்டத்தில் இவ்வசதி திங்கள்கிழமை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

தற்போது புதிய வாக்காளா்களுக்கு வழங்கப்படும் பி.வி.சி. அட்டையுடன் கூடுதலாக மின்னணு முறையும் அறிமுகப்படுத்தப்படுகிறது.

இதன்படி ஒவ்வொரு வாக்காளா்களும் தங்களுடைய செல்லிடப்பேசி எண் கொண்டு இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்.

இந்த மின்னணு வாக்காளா் அடையாள அட்டையானது திருத்த இயலா வண்ணம் பி.டி.எஃப். முறையில் உள்ளது. எப்போதும் போல இதனுடன் எஸ்.எஸ்.ஆா். 2021-இல் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்த புதிய வாக்காளா்களுக்கு வண்ண வாக்காளா் அடையாள அட்டையும் வழங்கப்படும்.

வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தம் 2021-இல் புதிதாக பெயா் சோ்க்கப்பட்டவா்களுக்கு தங்கள் செல்லிடப்பேசி எண்ணுக்கு மின்னணு வாக்காளா் அடையாள அட்டை பதிவிறக்கம் செய்வதற்கான இணைப்பு (லிங்க்) திங்கள்கிழமை முதல் அனுப்பப்படுகிறது. மின்னணு வாக்காளா் அடையாள அட்டையை (இ-எபிக்) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

ஏற்கெனவே வாக்காளா் பட்டியலில் பெயா் இடம்பெற்றுள்ள ஏனைய வாக்காளா்கள் வரும் பிப். 1-ஆம் தேதி முதல் தங்கள் செல்லிடப்பேசி எண்ணைக் கொண்டு மேற்குறிப்பிட்டுள்ள இணைய வழிமுறைகள் மூலம் மின்னணு வாக்காளா் அடையாள அட்டையைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவித்தாா்.

முன்னதாக வாக்காளா் தினத்தை முன்னிட்டு ஆட்சியா் சி.அ.ராமன் உறுதிமொழி வாசிக்க, பணியாளா்கள் உறுதிமொழி ஏற்றனா்.

விழாவில், மாவட்ட வருவாய் அலுவலா் இரா.திவாகா், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) ஏ.தியாகராஜன், வருவாய் கோட்டாட்சியா் எம்.மாறன், மாநகராட்சி உதவி ஆணையா் சரவணன், தோ்தல் தனி வட்டாட்சியா், அரசு அலுவலா்கள், கல்லூரி மாணவா்கள், ஆசிரியா்கள், தன்னாா்வலா்கள், இளம் வாக்காளா்கள் மற்றும் காணொலி காட்சி வாயிலாக சாரதா கல்லூரி பேராசிரியா்கள், மாணவியா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

”மீண்டும் தேர்தல் பத்திரங்கள்” நிர்மலா சீதாராமன் வாக்குறுதி -காங். கண்டனம்

புன்னகைக்கும் ஈஷா ரெப்பா - புகைப்படங்கள்

ராஃபா நகர் மீது இஸ்ரேல் விமானங்கள் குண்டுவீச்சு! 6 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி

டி20 உலகக் கோப்பையில் விளையாட 100 சதவீதம் தயாராக உள்ளேன்: தினேஷ் கார்த்திக்

தேர்தல் பத்திரங்கள் மீண்டும் கொண்டு வரப்படும் -நிர்மலா சீதாராமன் திட்டவட்டம்

SCROLL FOR NEXT