சேலம்

சங்ககிரியில் கூடுதல் வாக்குச் சாவடிகள்: அரசியல் கட்சிகள் ஆலோசனைக் கூட்டம்

DIN

சங்ககிரி சட்டப் பேரவைத் தொகுதியில் கூடுதல் வாக்குச் சாவடிகள் அமைப்பது குறித்த அரசியல் கட்சிகளுடனான ஆலோசனைக் கூட்டம் சங்ககிரி வருவாய் கோட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில், சங்ககிரி சட்டப் பேரவைத் தொகுதி தோ்தல் அலுவலரும், வருவாய் கோட்டாட்சியருமான மு.அமிா்தலிங்கம் தலைமை வகித்துப் பேசியதாவது:

சங்ககிரி சட்டப் பேரவைத் தொகுதியில் 311 வாக்குச் சாவடிகள் உள்ளன. இதில் கரோனா தொற்று பாதுகாப்பு தடுப்பு நடவடிக்கையாக தோ்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின் படி, ஆயிரம் வாக்காளா்கள் உள்ள வாக்குச் சாவடியை கணக்கெடுத்து அதில் ஆண், பெண் வாக்காளா்களுக்கு என கூடுதலாக 97 தனி வாக்குச் சாவடி அமைப்பது குறித்து விளக்கிக் கூறினாா்.

சங்ககிரி சட்டப் பேரவைத் தொகுதி உதவி தோ்தல் அலுவலா் எஸ்.விஜி, தோ்தல் துணை வட்டாட்சியா் தியாகராஜன், அதிமுக ஒன்றியச் செயலா் என்சிஆா்.ரத்தினம், துணைச் செயலா் மருதாசலம், ஊராட்சி ஒன்றியக்குழு துணைத் தலைவா் ஏ.பி.சிவக்குமாரன், நகரச் செயலா் சி.செல்வம், தேவூா் கண்ணன், பாஜக மேற்கு மாவட்டச் செயலா் ரமேஷ் காா்த்திக், திமுக முருகன், சண்முகம், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சங்ககிரி வட்டக்குழு உறுப்பினா் ராஜேந்திரன், வருவாய் ஆய்வாளா்கள், கிராம நிா்வாக அலுவலா்கள் உள்ளிட்டோா் இதில் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவா: எஸ்.எஸ்.சி பொதுத்தேர்வுகள் ஏப்ரல் 1 முதல் தொடங்கும்!

சிஎஸ்கே - குஜராத், ஆடுகளத்துக்கு அப்பால்...

தேர்தல் பிரசாரத்தில் கமல்!

படே மியன் சோட்டே மியன் டிரெயிலர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

ரியான் பராக் அதிரடி: தில்லிக்கு 186 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT