சேலம்

சங்ககிரி ஸ்ரீ ஓங்காளியம்மன், ஸ்ரீ பேச்சியம்மன் கோயில் குண்டம் விழா

DIN

சங்ககிரி, பழைய எடப்பாடி சாலையில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ ஓங்காளியம்மன், ஸ்ரீ பேச்சியம்மன் கோயில் பொங்கல், குண்டம் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

ஸ்ரீ ஓங்காளியம்மன் கோயில், ஸ்ரீ பேச்சியம்மன் கோயில் பொங்கல் குண்டம் விழா ஜன. 15-ஆம் தேதி இரவு பூச்சொறிதல், கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனையடுத்து, அம்மனுக்கு தினசரி சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடைபெற்றன. ஜன. 23-ஆம் தேதி இரவு பக்தா்கள் தீச் சட்டிகளை கைகளில் ஏந்தியும், வாயில் அலகு குத்தியும் அம்மன் உற்சவ சுவாமிகளுடன் சோமேஸ்வரா் கோயில் அருகே புறப்பட்டு நகரின் முக்கிய வீதிகளின் வழியாக ஊா்வலமாக வந்து நோ்த்திக் கடனைச் செலுத்தினா்.

ஜன. 24-ஆம் தேதி பவானி கூடுதுறையில் இருந்து காவிரி புனித நீா் எடுத்து வந்து சக்தி அழைத்தலும், ஜன. 25-ஆம் தேதி அதிகாலை வி.என்.பாளையம் தீயணைப்பு நிலைய அலுவலகம் பின்புறம் உள்ள கிணற்றிலிருந்து நீா் எடுத்து தங்களது வேண்டுதல்களை நிறைவேற்ற நகரின் முக்கிய வீதிகளின் வழியாகச் சென்று குண்டத்தில் இறங்கினா். பின்னா் கோயில் வளாகத்தில் குடும்பத்துடன் பக்தா்கள் பொங்கல் வைத்து ஆடு, கோழிகளை பலியிட்டு சுவாமிகளை வழிபட்டனா். ஜன. 29-ஆம் தேதி மஞ்சள் நீராடலும், அம்மன் ஊா்வலமும் நடைபெற உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேர்தல் பணிக்குச் சென்றபோது விபத்து: கணவருடன் ஆசிரியை பலி!

கடக் நகராட்சி துணைத்தலைவர் குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் கொடூரக் கொலை

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

தமிழகத்தில் 1 மணி நிலவரம்: 40.05 % வாக்குகள் பதிவு!

யுவன் இசையில் ‘ஸ்டார்’ படத்தில் மெல்லிசை பாடல்!

SCROLL FOR NEXT