சேலம்

பூத்தாலக்குட்டை பூத்தாழீஸ்வரர் கோயிலில் பிரதோஷ சிறப்பு பூஜை

26th Jan 2021 08:43 PM

ADVERTISEMENT

சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட அன்னதானப்பட்டி ஊராட்சி, பூத்தாலகுட்டை கிராமத்தில் உள்ள அருள்மிகு புவனேஸ்வரியம்மன் உடனமர் பூத்தாழீஸ்வரர் கோயிலில் செவ்வாய்க்கிழமை மாலை பிரதோஷ சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. 

அருள்மிகு புவனேஸ்வரியம்மன் உடனமர் பூத்தாழீஸ்வரர் சுவாமிகளுக்கு பிரதோஷத்தையொட்டி  சிறப்பு அபிஷேகங்கள், அலங்கராம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன.

பின்னர் மாலையில் உற்சவ மூர்த்தி சுவாமிகளுக்கும், நந்தி பகவானுக்கும் பால், இளநீர், மஞ்சள், சந்தனம், திருமஞ்சனம், பன்னீர், இளநீர் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களை கொண்டு அபிஷேகங்கள், அலங்காரங்கள் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.  

ADVERTISEMENT

இதில் கிராமப்புறங்களைச் சேர்ந்த பக்தர்கள் அதிகளவில் கலந்து கொண்டு சுவாமிகளை வழிப்பட்டுச் சென்றனர்.

Tags : Salem
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT