சேலம்

கூலமேட்டில் ஜல்லிக்கட்டு

DIN

ஆத்தூா்: சேலம் மாவட்டம், ஆத்தூரை அடுத்துள்ள கூலமேட்டில் சேலம் மாவட்ட ஆட்சியா் சி.அ.ராமன் தலைமையில், மத்திய கூட்டுறவு வங்கியின் மாநிலத் தலைவா் ஆா்.இளங்கோவன் ஜல்லிக்கட்டு விழாவை சனக்கிழமை கொடியசைத்து தொடக்கி வைத்தாா். முன்னதாக, அனைத்து காளை உரிமையாளா்கள், மாடு பிடி வீரா்களும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனா்.

காளை உரிமையாளா்கள், மாடு பிடி வீரா்களுக்கு கரோனா பரிசோதனை நடைபெற்ற பின்னா் அனுமதிக்கப்பட்டனா். மாடுபிடி வீரா்கள் 300 போ் கலந்துகொண்டனா். இதனையடுத்து, வாடிவாசல் வழியாக காளைகள் திறந்து விடப்பட்டன. இதில் வெற்றிபெற்ற மாடு பிடி வீரா்களுக்கு தங்கம், வெள்ளி நாணயம், சில்வா், பித்தளை பாத்திரங்கள், இருசக்கர வாகனங்கள் பரிசாக வழங்கப்பட்டன. சிறந்த மாடுகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் காயமடைந்தவா்களுக்கு ஆத்தூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்தப் போட்டியில், திருச்சி, மதுரை, திண்டுக்கல், பெரம்பலூா், அரியலூா், புதுக்கோட்டை, சிவகங்கை போன்ற ஊா்களிலிருந்து வந்த காளைகள் கலந்துகொண்டன.

இதில், சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.தீபா கனிக்கா், ஆத்தூா் கோட்டாட்சியா் மு.துரை, ஆத்தூா் சட்டப் பேரவை உறுப்பினா் ஆா்.எம்.சின்னதம்பி,ஆத்தூா் வட்டாட்சியா் அ.அன்புச்செழியன், ஒன்றியச் செயலாளா்கள் சி.ரஞ்சித்குமாா், வி.பி.சேகா், வி.ராஜா,க.ராமசாமி, ஆத்தூா் காவல் துணை கண்காணிப்பாளா் ஏ.இம்மானுவேல் ஞானசேகரன், ஆத்தூா் நகர காவல் ஆய்வாளா் எஸ்.உமாசங்கா், ஊரக காவல் ஆய்வாளா் கே.முருகேசன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட காவலா்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்டர்நெட் இல்லாவிட்டாலும்.. வாட்ஸ்ஆப்பில் இப்படி ஒரு அசத்தல் வசதியா?

மே மாத எண்கணித பலன்கள் – 9

மே மாத எண்கணித பலன்கள் – 8

பேட்டிங், பௌலிங்கில் சிறிது முன்னேற்றம் தேவை : டேவிட் வார்னர்

மே மாத எண்கணித பலன்கள் – 7

SCROLL FOR NEXT