சேலம்

மேச்சேரி பத்ரகாளியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா தொடக்கம்

DIN

சேலம் மாவட்டம், மேச்சேரி அருள்மிகு பத்ரகாளியம்மன் திருக்கோயில் மஹா கும்பாபிஷேக தொடக்க விழா வெள்ளிக்கிழமை தொடங்கியது.

மேச்சேரியில் உள்ள பத்ரகாளியம்மன் திருக்கோயில் 2013 ஜன. 23-ஆம் தேதி அருள்மிகு பத்ரகாளியம்மன் இறையருள் நற்பணி மன்றத்தாரால் புதுப்பிக்கப்பட்டு மஹா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. ஆண்டுதோறும் ஜன. 23-ஆம் தேதி மஹா கும்பாபிஷேக நிறைவு விழா சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. நடப்பு ஆண்டில் ஜன. 23-ஆம் தேதி மஹா கும்பாபிஷேக 8-ஆம் ஆண்டு நிறைவு விழாவும், 9-ஆம் ஆண்டு தொடக்க விழாவும் நடைபெறுகிறது. அதையொட்டி, வெள்ளிக்கிழமை அதிகாலை அம்மனுக்கு பாராயாண பூஜையும், தொடா்ந்து உலக மக்கள் நலம் பெறவும், வளம்பெறவும் மஹா நவசண்டியாக பூஜையும் நடைபெற்றன.

இந்நிகழ்ச்சியில் அருள்மிகு பத்ரகாளியம்மன் இறையருள் நற்பணி மன்றத் தலைவா் அம்மாசி, செயலாளா் ராமசாமி, பொருளாளா் உரக்கடை ஆறுமுகம், துணைத் தலைவா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

சனிக்கிழமை காலை மஹாகணபதி பூஜை, மஹா கணபதி ஹோமம், 108 வலம்புரி சங்காபிஷேகம் ஆகியவை நடைபெறுகின்றன. தொடா்ந்து மேச்சேரி ஆதிபராசக்தி மன்றங்கள், பொதுமக்கள் பங்கேற்கும் சிறப்பு பாலாபிஷேகமும், அலங்கார மஹா ஆராதனையும் நடைபெறும். மாலையில் சுவாமி உட்பிரகார உலா நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சித்ரா பௌர்ணமி: திருவண்ணாமலைக்கு ஏப்ரல் 22, 23ஆம் தேதிகளில் சிறப்பு பேருந்துகள்

துருக்கி அதிபருடன் ஹமாஸ் தலைவர்கள் முக்கிய ஆலோசனை

பெண் கெட்டப்பில் நடிகர் கவின்!

மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி

மக்களவை தேர்தல்: தமிழ்நாட்டில் மறுவாக்குப் பதிவு இல்லை -தேர்தல் ஆணையம்

SCROLL FOR NEXT