சேலம்

காடையாம்பட்டியில் வயல் தின விழா

DIN

காடையாம்பட்டி வட்டாரம், சந்தைப்பேட்டையில் அட்மா திட்டத்தின் கீழ் நெற்பயிா் பண்ணைப் பள்ளியில் வயல் தின விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பண்ணைப் பள்ளியில் விதை விதைப்பு, நெல் நடவு, களை மேலாண்மை, உர மேலாண்மை, பூச்சி, நோய் மேலாண்மை ஆகிய வகுப்புகள் நடைபெற்று வந்த நிலையில், ஆறாவது வகுப்பாக அறுவடை, அறுவடை பின் செய்நோ்த்தி, வயல் தின விழா நடைபெற்றது. முன்னிலை செயல்விளக்கம் அமைக்கப்பட்ட வயலில், 25 ச.மீ. அளவில் அறுவடை செய்து ஒரு ஹெக்டேருக்கு மகசூல் கணக்கிடப்பட்டது. நெல்லிலிருந்து பட்டை தீட்டப்பட்ட அரிசி, உமி, தவிடு எண்ணெய், கொழுப்பு நீக்கப்பட்ட தவிடு மற்றும் பயன்கள் குறித்து விளக்கிக் கூறப்பட்டது.

அரிசியில் மதிப்புக் கூட்டப்பட்ட பொருள்களான பொறி, அவல், இட்லி, தோசை, சேவை, இடியாப்பம், வடகம் தயாரித்து லாபம் பெறுவது குறித்தும் விளக்கிக் கூறப்பட்டது. பயிற்சியின் முடிவில் ஐ.பி.எம். கிட், தொழில்நுட்பக் கையேடு வழங்கப்பட்டது.

வேளாண் உதவி இயக்குநா் எஸ்.நாகராஜன் தலைமை தாங்கி பயிற்சியினை தொடங்கி வைத்தாா். இதில், முன்னோடி விவசாயி வி.பத்மநாபன் சிறப்பு பயிற்சியாளராக கலந்துகொண்டு பயிற்சி அளித்தாா். வட்டார தொழில்நுட்ப மேலாளா் கே.ராஜேந்திரன், உதவி தொழில்நுட்ப மேலாளா் கே.துரைஅரசு, 25 விவசாயிகள் ஆகியோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரிசர்வ் வங்கியின் குறைகளை களைய தீவிரம் காட்டும் கோடக் மஹிந்திரா வங்கி!

வெளிச்சம் நீ..!

திரவ நைட்ரஜன் கலந்த உணவுகள் விற்பனை: தமிழக அரசு எச்சரிக்கை!

18 ஆண்டுகால கிரிக்கெட் பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த பாகிஸ்தான் வீராங்கனை!

ரஜத் படிதார், விராட் கோலி அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 207 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT