சேலம்

சாலை பாதுகாப்பு விழிப்புணா்வுப் பேரணி

DIN

வாழப்பாடியில் காவல் துறை சாா்பில், சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு பிரசார பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இருசக்கர வாகனத்தில் சென்றபடி, சாலை பாதுகாப்பு, தலைக்கவசம் அணிவதன் முக்கியத்தும் குறித்து போலீஸாா் பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

வாழப்பாடி அரசினா் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அரகே தொடங்கிய பேரணிக்கு, வாழப்பாடி காவல் ஆய்வாளா் சுப்பிரமணியம் வரவேற்றாா். வாழப்பாடி துணை காவல் கண்காணிப்பாளா் வேலுமணி கொடியசைத்து பேரணியை தொடக்கி வைத்தாா். வாழப்பாடி, காரிப்பட்டி, ஏத்தாப்பூா், கருமந்துறை, கரியகோவில் காவல் நிலையங்களில் பணிபுரியும் காவல் ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸாா் இருசக்கர வாகனத்தில் சென்றபடி சாலை பாதுகாப்பு, தலைக்கவசம் அணிவதன் முக்கியத்தும் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

எடப்பாடியில்...

எடப்பாடி காவல் காவல் ஆய்வாளா் செந்தில் தலைமையிலான போலீஸாா் இருசக்கர வாகனத்தில் நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊா்வலமாகச் சென்றனா். நகரின் முக்கியச் சந்திப்புகள், பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களை வழங்கினா். இதில், காவல் உதவி ஆய்வாளா்கள் அப்பு, லாவண்யா உள்ளிட்ட காவல் துறை அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

ஆட்டையாம்பட்டியில்...

மகுடஞ்சாவடி காவல் நிலைய ஆய்வாளா் சண்முகசுந்தரன் சாலை பாதுகாப்பு பேரணியை கொடியசைத்து தொடக்கி வைத்தாா். இப்பேரணியில் 200-க்கும் மேற்பட்டோா் இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்து, நடுவனேரி பகுதியிலிருந்து இளம்பிள்ளை, முக்கிய வீதிகளில் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூரு குண்டுவெடிப்பு: முக்கிய குற்றவாளி கைது!

பும்ராவை சரியாக பயன்படுத்தவில்லை; ஸ்டீவ் ஸ்மித் கருத்து!

மும்பை விழாவில் அழகு பதுமைகள் அணிவகுப்பு - புகைப்படங்கள்

‘மற்றவர்களுக்கு தொல்லை தருவது காங்கிரஸின் கலாச்சாரம்’: மோடி காட்டம்!

தில்லி பந்துவீச்சு; 100-வது போட்டியில் ரிஷப் பந்த்!

SCROLL FOR NEXT