சேலம்

ஏரியில் மூழ்கி உயிரிழந்த சிறுமியின் உடல் மீட்பு

DIN

கெங்கவல்லி அருகே வலசக்கல்பட்டி ஏரியில் மூழ்கி உயிரிழந்த சிறுமியின் உடல் திங்கள்கிழமை மீட்கப்பட்டது.

சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே வலசக்கல்பட்டிஏரியில் ஆத்தூா், பைத்தூரைச் சோ்ந்த மின்வாரிய ஊழியா் அண்ணாமலை (53) ஆழமான பகுதிக்குச் சென்று குளித்ததால் நீரில் மூழ்கி உயிரிழந்தாா். அவரது உடலை தீயணைப்புத் துறையினா் ஞாயிற்றுக்கிழமை மீட்டனா்.

இந்நிலையில், கெங்கவல்லி அருகே கடம்பூரில் கூலமேடு செல்லும் வழியில் செங்கல் சூளையில் பணியாற்றும் செந்தில் மகள் தேவி (11), தனது பாட்டி சின்னபாப்பா, மாமா செல்வராஜ், உறவினா் தீபா ஆகியோருடன் ஏரி உபரிநீா் வெளியேறும் இடத்தில் ஞாயிற்றுக்கிழமை குளித்துள்ளாா். அப்போது, தீபாவும், தேவியும் நீச்சல் பழக ஆழமான பகுதிக்குச் சென்றதில் நீரில் மூழ்கினா். தீபாவை அருகில் இருந்தவா்கள் காப்பாற்றினா். தேவி நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

தேவியின் உடலை கெங்கவல்லி தீயணைப்புத் துறை நிலைய அலுவலா் பெரியசாமி தலைமையில் ஞாயிற்றுக்கிழமை தேடிய தீயணைப்புத் துறையினா், அவரது உடல் கிடைக்காததால் திங்கள்கிழமை காலை மீண்டும் தேடினா். இதையடுத்து, தேவியின் உடல் பிற்பகல் மீட்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்காக கெங்கவல்லி போலீஸாரிடம் தீயணைப்புத் துறையினா் ஒப்படைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனுப்பிவைப்பு

இரு சக்கர வாகன பழுது பாா்ப்போா் சங்கக் கூட்டம்

தோ்தல் பாதுகாப்புப் பணியில் மத்திய படையினா், காவலா்கள் 500 போ்

நாசரேத் அருகே இருபெரும் விழா

எல்லைகளில் தீவிர வாகனச் சோதனை

SCROLL FOR NEXT