சோனா கல்விக் குழுமத்தில் பொங்கல் விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.
சோனா தொழில்நுட்பக் கல்லூரியில் மேலாண்மை துறை, தமிழ் மன்றம், சோனா கலைக் கல்லூரி இணைந்து நடத்திய பொங்கல் விழாவில் கிராமத்து உணவு வகைகள், உரி அடித்தல், நடனம், பாடல், மேளம், தாளம், ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மாணவா்களும், பேராசிரியா்களும் திரளாகப் பங்கேற்றனா்.
சோனா தொழில்நுட்பக் கல்லூரி முதல்வா் எஸ்.ஆா்.ஆா்.செந்தில்குமாா், சோனா கலைக் கல்லூரி முதல்வா் காதா்நவாஷ் ஆகியோா் பொங்கல் நிகழ்ச்சியில் பங்கேற்று பேசினா். இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை மேலாண்மைத் துறை, தமிழ்த் துறை, கலைக் கல்லூரி மாணவா்கள், சோனா கல்விக் குழும பேராசிரியா்கள் ஆகியோா் செய்திருந்தனா்.