வியாபாரத்திற்காக ஜனநாயகத்தையே தூக்கிலிட்டு விட்டார்கள் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் விமரிசித்துள்ளார்.
சேலம் மாவட்டம் சங்ககிரியில் கமல்ஹாசன் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசியது:
"சங்ககிரி கோட்டையில் வெள்ளையர்கள் தீரன் சின்னமலையை தூக்கிலிட்டனர். அன்று வியாபாரத்திற்காக வந்த வெள்ளையர்கள் அவரைத் தூக்கிலிட்டார்கள். இன்று வியாபாரத்திற்காக ஜனநாயகத்தையே தூக்கிலிட்டு விட்டார்கள் இவர்கள் எல்லோரும்.
ADVERTISEMENT
அதுவும் கம்பெனிதான் இதுவும் கம்பெனிதான். இந்த கம்பெனிகளை கலைந்துவிட்டு ஒரு நியாயமான கட்சியை ஆட்சியில் அமர்த்த வேண்டும்" என்றார்.
இதைத் தொடர்ந்து, கமல் திருச்செங்கோடு பிரசாரத்திற்கு புறப்பட்டுச் சென்றார்.