சேலம்

மேட்டூரில் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் தொடக்கம்

4th Jan 2021 01:14 PM

ADVERTISEMENT

மேட்டூரில் சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியை மாநிலங்களவை உறுப்பினர் என்.சந்திரசேகரன் இன்று தொடங்கி வைத்தார்.

சேலம் மாவட்டம், மேட்டூர் தொகுதியில் 187 நியாயவிலைக் கடைகள் மூலமாக 1,30,488 பயனாளிகள் குடும்ப அட்டை மூலமாக பொருள்களை வாங்கி வருகின்றனர். இந்த நிலையில் கடந்த  டிசம்பர் மாதம் 19ஆம் தேதி எடப்பாடியில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் சிறப்பு பொங்கல் பரிசாக குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூபாய் 2,500 வழங்கப்படும் என முதல்வர் அறிவித்தார். 

அதனைத் தொடர்ந்து இன்று மேட்டூர் சதுரங்காடியில் உள்ள பொன்னி கூட்டுறவு சிறப்பு அங்காடியில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரொக்கம் 2,500-ரூபாயுடன் ஒரு கிலோ அரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முந்திரி, உலர் திராட்சை, ஏலக்காய், முழு நீள கரும்பு அடங்கிய சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பினை மாநிலங்களவை உறுப்பினர் சந்திரசேகரன் வழங்கி நிகழ்ச்சியை தொடங்வைத்தார். 

இந்நிகழ்ச்சியில் வட்டாட்சியர் சுமதி, நகர கூட்டுறவு வங்கி டைரக்டர் சாதிக் அலி, அ.தி.மு.கதகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட நிர்வாகி நிர்மல் ஆனந்த்மற்றும் அரசு அதிகாரிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
 

ADVERTISEMENT

Tags : pongal gift
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT