சேலம்

முதல்வர் தொகுதியில் பொங்கல் பரிசு விநியோகம் தொடக்கம்

4th Jan 2021 11:44 AM

ADVERTISEMENT

முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியின் தொகுதியான, எடப்பாடி தொகுதியில் பொங்கல் பரிசு விநியோகம் தொடங்கியது. 
முன்னதாக எடப்பாடி நகராட்சிக்கு உட்பட்ட ஆலச்சம்பாளைம் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சயில், பெதுக்குழு உறுப்பினரும், மாவட்ட பொருப்பாளருமான வெங்கடாஜலம், குடும்ப அட்டைதாரர்களுக்கு, ரூ.2500 ரொக்கத்தொகையுடன், அரிசி , சர்க்கரை, திராட்சை, முந்தரி மற்றும் முழுகரும்பு அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பினை வழங்கி துவக்கிவைத்தார். 
நிகழ்ச்சியில் சங்ககிரி கோட்டாட்சியர் அமிர்தலிங்கம், எடப்பாடி வட்டாட்சியர் முத்துராஜா, வட்டவழங்கல் அலுவலர் கோமதி, நகரசெயலாளர் முருகன், முன்னாள் நகரமன்றத்தலைவர் டி.கதிரேசன், மாவட்ட கூட்டுறவு அச்சக தலைவர் கந்தசாமி, ராமன், ஏ.எல்.சுரேஷ் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர். கொங்கணாபுரம் ஒன்றியப் பகுதியில் நடைபெற்ற பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்வில் ஒன்றியக்குழு தலைவர் கரட்டூர்.மணி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசினை வழங்கி துவக்கிவைத்தார். 
நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சிக்குழுத்துணைத்தலைவர் ராஜேந்திரன் உள்ளிட்ட 
முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். 
 

Tags : pongal gift
ADVERTISEMENT
ADVERTISEMENT