சேலம்

ஓமலூரில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணி தொடக்கம்

4th Jan 2021 03:11 PM

ADVERTISEMENT

ஓமலூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட கிராமங்களில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணியை சட்டப்பேரவை உறுப்பினர் வெற்றிவேல் இன்று தொடங்கி வைத்தார். நிகழ்சசிக்கு கருப்பூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர் கோவிந்தசாமி தலைமை தாங்கினார். 

இதேபோன்று ஓமலூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க முன்னாள் தலைவர் தளபதி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சட்டப்பேரவை உறுப்பினர் வெற்றிவேல் ஓமலூர் பேரூராட்சி பகுதியைச் சேர்ந்தவர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகை வழங்கும் பணியைத் தொடங்கி வைத்தார்.

ஓமலூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில் தொகுப்பு வழங்கும் பணியினை ஒன்றியக்குழு தலைவர் எஸ்.எஸ்.கே.ஆர் ராஜேந்திரன் தொடங்கி வைத்தார். மேலும் பச்சனம்பட்டி பெரமச்சர் முத்துநாயக்கன்பட்டி உள்ளிட்ட கிராமங்களிலும் பொங்கல் பரிசு வழங்கும் பணி தொடங்கியது. 

இந்த நிகழ்ச்சியில் அதிமுக நகர செயலாளர் சரவணன் ஓமலூர் ஒன்றிய எம்ஜிஆர் இளைஞர் அணி பொருளாளர் திருமுருகன், ஜெயலலிதா பேரவை ஒன்றிய துணைத்தலைவர் சிவகுமார் அதிமுக மாணவர் அணி பொருளாளர் ராஜ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

ADVERTISEMENT

Tags : Pongal Gift
ADVERTISEMENT
ADVERTISEMENT